உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / புடிச்ச வீடும் போச்சு; கொடுத்த பணமும் போச்சு! குத்தகைதாரர்கள் அவதியோ அவதி

புடிச்ச வீடும் போச்சு; கொடுத்த பணமும் போச்சு! குத்தகைதாரர்கள் அவதியோ அவதி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், வீடுகளை குத்தகைக்கு பெறுவோரை குறிவைத்து புதிய மோசடி நடப்பதாக, ரியல் எஸ்டேட் துறையினர் தெரிவித்தனர்.சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுக்குமாடி வீடு வாங்குவோரில் பலரும் வீட்டை வாடகைக்கு விடுவதை வழக்கமாக வைத்துள்ளனர். சிலர் குத்தகை முறையில், வீட்டை கொடுக்கின்றனர். ஒரு நபர், 5 லட்சம் ரூபாயை கொடுத்து விட்டு, நான்காண்டு குத்தகை என்ற அடிப்படையில் வீட்டை பெறுகிறார். இதில், நான்கு ஆண்டுகள் முடிந்த நிலையில், குத்தகை தொகையை திரும்ப பெற்று வெளியேறுவார் அல்லது குத்தகையை புதுப்பிப்பார்.இவ்வாறு மொத்தமாக பணம் கொடுத்து, குத்தகைக்கு வீடு தேடுவோரை குறிவைத்து, புதிய மோசடி நடப்பதாக புகார்கள் வந்துள்ளன.இந்திய கட்டுமான வல்லுனர் சங்கத்தின் தென்னக மைய நிர்வாகி எஸ்.ராமபிரபு கூறியதாவது:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், தவறான ஆவணங்கள் அடிப்படையில் வங்கிகளில், 50 முதல், 60 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, வீடு வாங்கும் நபர்கள், அதை குத்தகைக்கு விடுகின்றனர். இதற்காக, 5 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கின்றனர்.இதன் பின் சில மாதங்களில், வங்கியில் வீட்டுக்கடனை செலுத்தாமல் தலைமறைவாகின்றனர். சம்பந்தப்பட்ட வங்கி, அந்த வீட்டை கையகப்படுத்தி, சட்டப்படி ஏலம் விட நடவடிக்கை எடுக்கிறது. இதில், அந்த வீட்டில் குத்தகை அடிப்படையில் குடியிருப்பவர் வெளியேற்றப்படுகிறார். அவர் செலுத்திய, 5 லட்சம் ரூபாய் பறிபோகிறது.பல இடங்களில் மூத்த குடிமக்கள், குத்தகை அடிப்படையில் வீடு பெற்று ஏமாற்றப்பட்டு உள்ளதாக புகார்கள் வந்துள்ளன. காவல் துறையிடம் புகார் செய்யும் வழிமுறை தெரியாமல் பலரும் தவிக்கின்றனர்.குத்தகைக்கு வீடு பெறுவோர், அதற்கான ஆவணத்தை முறையாக பதிவு செய்தால், சார் - பதிவாளர், சம்பந்தப்பட்ட வங்கிக்கு இதுகுறித்து தகவல் தெரிவிப்பார். இதனால், அந்த வீடு குத்தகைக்கு விடப்பட்டுள்ளது என்பது வங்கிக்கு முன்கூட்டியே தெரியவரும். தவணை நிலுவை வைத்திருப்பவரின் வீடு என்றால், வங்கிகள் அது குறித்து சார் - -பதிவாளருக்கும், அவர் வாயிலாக மக்களுக்கும் தெரிவிக்க வாய்ப்பு ஏற்படும். இதனால், சம்பந்தப்பட்ட வங்கியிடம் இருந்து பாதிக்கப்பட்டவர், நிவாரணம் கோர வாய்ப்பு இருக்கும். பொது மக்கள் தான் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்போது தான் இதுபோன்ற மோசடிகளை தடுக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Kundalakesi
ஜூலை 22, 2024 08:03

குத்தகைக்கு எவளோ பதிவு கட்டணம். அதாவது சில ஆயிரங்களில் முடிந்தால் சரி. தண்டமாக பதிவு பத்திரம், கட்டணம் மற்றும் அலுவலக இனாம் வேற அழ வேண்டும். இவை சட்டமாக வந்தால் மக்கள் பாதிப்பு குறையும்.


அப்புசாமி
ஜூலை 22, 2024 08:00

வீட்டைக்.கொளுத்திட்டு போயிடுங்க. வயத்தெரிச்சலாவது தீரும். கண்டவனுக்கெல்லாம் கடன் குடுக்கும் வங்கிகளுக்கு வாராக்கடன் வங்கி தொறந்தே இருக்கும்.


R SRINIVASAN
ஜூலை 22, 2024 07:57

வங்கிகள் கமிஷன் வாங்கி கடன் கொடுக்கிறார்களா .வங்கிகளில் வியாபாரம் செய்வதற்கு கடன் வாங்குபவர்கள் ஸ்டாக் இருப்பு போன்ற ஆவணங்களை முறையாக சமர்பிப்பதில்லை. ஆண்டு வரவு செலவு கணக்குகளை உடனுக்குடன் சமர்பிப்பதில்லை. வங்கிகளும் அதை கண்டு கொள்வதில்லை. கடைசியில் வராத கடன் என்று நிர்ணயம் செய்து கடன் வாங்கியவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கிறார்கள்.


GMM
ஜூலை 22, 2024 07:54

வீட்டு வாடகை ஒப்பந்தம் 11 மாதம். புதுப்பிக்க முடியும். குத்தகை ஒப்பந்தம் சில ஆண்டுகள். இதனை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். வில்லங்கம் தெரிய வரும். தமிழகத்தில் திராவிட மோசடிகள் சர்வ சாதாரணம். வழக்கில் ஒருபக்க விசாரணை முக்கிய காரணம். வாடகைதாரர் வீட்டை காலி செய்ய வில்லையென்றால் வக்கீல், போலீசார் உதவி தேவை. இதில் இவர்களுக்கு வேலையில்லை. வருவாய் துறை நடவடிக்கை செலவு இல்லாதது. ஆனால், திராவிடம் அவர்களை முடக்கி உரிய வேலை செய்ய விடுவது இல்லை. வழக்கில் இருவருக்கும் பலன், பாதிப்பு இருந்தால் விரைவில் முடியும். தமிழகத்தில் திராவிடர் அல்லாதோர் சொத்து வைத்து இருந்தால், அவதி தான்.


S. Narayanan
ஜூலை 22, 2024 07:54

விடியல் அரசின் ஆசியுடன் நடக்கும் ரௌடி ஆட்சியில் இன்னும் பல மக்கள் அவதி அடையும் முன் மக்கள் விழித்து கொண்டால் உண்மை விடியல் பிறக்கும்


Svs Yaadum oore
ஜூலை 22, 2024 06:52

வங்கிகளில், 50 முதல், 60 லட்சம் ரூபாய் வரை கடன் பெற்று, வீடு வாங்கும் நபர்கள், அதை குத்தகைக்கு விடுகின்றனராம் . இதற்காக, 5 லட்சம் ரூபாய் வரை பணம் வசூலிக்கின்றனராம் . இதன் பின் சில மாதங்களில், வங்கியில் வீட்டுக்கடனை செலுத்தாமல் தலைமறைவாகின்றனராம். இது போன்ற மோசடி செய்பவர்கள் எல்லாம் விடியலுக்கு வோட்டு போடும் திராவிடர்களாகத்தான் இருப்பார்கள் ....பழக்க தோஷம் ...


Mohanakrishnan
ஜூலை 22, 2024 06:13

எல்லா ஊர்களிலும் இந்த பிரச்சனை உள்ளது திருச்சியில் பல சம்பவங்கள் இது போல உளளது


Kasimani Baskaran
ஜூலை 22, 2024 05:48

வீடு வாங்கியோருக்கு வேலை போய் விட்டால் இது போல பல சிக்கல்கள் வர வாய்ப்புண்டு. பிரச்சினைகளை தீர்க்க வங்கியிடம் நேரடியாக பேசலாம். அதை விட்டுவிட்டு மோசடிப்பேர்வழி போல ஓடிஒளிவது பெயரை முழுவதுமாக, நிரந்தரமாக ரிப்பேர் ஆக்கி விடும். அடுத்த முறை வங்கியிடம் கடன் வாங்க முடியாது.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ