மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
3 hour(s) ago
புதுடில்லி:பிரபல தாதா நரேஷ் சேத்தி கும்பலைச் சேர்ந்த ரவுடி கைது செய்யப்பட்டார்.புதுடில்லியில் பல குற்றச் செயல்களை செய்து வருபவர் தாதா நரேஷ் சேத்தி. இவர், கடந்த பிப்ரவரி 27ம் தேதி, ரோகிணியில் வசிக்கும் ரியல் எஸ்டேட் தொழிலதிபர் யோகேஷ் சர்மாவிடம் 2 கோடி ரூபாய் பணம் கேட்டு ஆள் அனுப்பினார்.நரேஷ் கும்பலைச் சேர்ந்த மோஹித்,24, ரோகிணியில் உள்ள சர்மா வீட்டுக்குச் சென்று துப்பாக்கியால் சுட்டு பணம் கேட்டு மிரட்டினார்.இதுகுறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து மோஹித்தை தேடி வந்தனர். இந்நிலையில், ரகசிய தகவல் அடிப்படையில், போலீசார் அதிரடி தேடுதல் வேட்டை நடத்தி மோஹித்தை கைது செய்தனர். அண்டை மாநிலமான ஹரியானாவில் பல கொள்ளை, கொலை மற்றும் ஆயுதம் பதுக்கல் உள்ளிட்ட வழக்குகள் மோஹித் மீது நிலுவையில் உள்ளன.
3 hour(s) ago