உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் வெட்டி படுகொலை

பட்டப்பகலில் வீடு புகுந்து பெண் வெட்டி படுகொலை

பெ.நா.பாளையம்: கோவை மாவட்டம், நரசிம்மநாயக்கன்பாளையம், பாலாஜி நகரில் வசிப்பவர் மனோகரன். இவரது மனைவி ரேணுகா, 40; தனியார் நிறுவன பணியாளர். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.நேற்று மதியம் மனோகரன், அவரது குழந்தைகள் வெளியே சென்று விட்டு மாலை வீடு திரும்பினர். ரேணுகாதேவி தலை, முகம், கழுத்து, கை உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டப்பட்ட நிலையில், வீட்டில் சடலமாக கிடந்தார். அவரது கழுத்தில் கிடந்த 3 சவரன் தங்க செயின் காணவில்லை.பெரியநாயக்கன்பாளையம் டி.எஸ்.பி., நமச்சிவாயம், இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன், மற்றும் போலீசார், சம்பவம் நடந்த வீட்டுக்கு அருகே இருந்த கண்காணிப்பு கேமரா பதிவை ஆய்வு செய்தனர்.நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஒரு நபர் ரேணுகா வீட்டுக்கு பின்புறமாக காம்பவுண்ட் சுவர் ஏறி, வீட்டுக்குள் நுழைவதும், ஏழு நிமிடங்களுக்கு பின் சுவர் ஏறி குதித்து, வந்த வழியாக திரும்பி சென்றதும் தெரியவந்தது. பெரியநாயக்கன்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ