உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நாட்டை ஆள்வோருக்கு எந்த தகுதி தேர்வும் கிடையாது: சீமான் ஆவேசம்

நாட்டை ஆள்வோருக்கு எந்த தகுதி தேர்வும் கிடையாது: சீமான் ஆவேசம்

கோவை : “இந்த நாட்டில் மட்டும் தான், எந்த தகுதியுமே இல்லாதவர் நாட்டை ஆளும் தகுதி பெற முடியும்,” என கோவையில் சீமான் தெரிவித்தார்.கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அளித்த பேட்டி:புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொள்கிறோமா, எதிர்க்கிறோமா என்பதில் தெளிவான முடிவெடுக்க வேண்டும். கல்வி சுகமாக இருக்க வேண்டுமே தவிர, சுமையாக இருக்கக்கூடாது. மதிப்பெண்ணை வைத்து மனித அறிவை மதிப்பிடுவது சரியாக இருக்காது.

கல்வி வியாபாரம்

அனைத்துக்கும் தேர்வு வைக்கின்றனர்; நாட்டையே நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் தலைவர்கள் தேர்வு எழுதுவதில்லை. இந்த நாட்டில் மட்டும் தான், எந்த தகுதியுமே இல்லாதவர் நாட்டை ஆளும் தகுதி பெற முடியும். ஒரு வக்கீல் நீதிபதியாகவும், மருத்துவம் படிக்கவும், கலெக்டராகவும், அதிகாரிகளாகவும் தேர்வு எழுத வேண்டும். ஆனால், நாட்டை ஆள, எந்த தேர்வும் எழுத வேண்டாம். கல்வியை வியாபாரமாக்கி விட்டு, சம கல்வி சம உரிமை பேசுவது சரியல்ல. ஏழைக்கு ஒரு கல்வி; பணக்காரனுக்கு ஒரு கல்வி. சமச்சீர் கல்வி என சொல்லிவிட்டு, கல்வியை வியாபாரப் பொருளாக்கி விட்டனர்.எங்கு நின்றாலும் நான் தனித்து நிற்பேன். கூட்டணி இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என கேட்பர். ஆனால், கொள்கை இல்லாமல் எப்படி வெல்ல முடியும் என யாரையும் கேட்பதில்லை.

தொப்பி போட்டு வேடம்

என் கட்சியில் இருந்து யார் வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் பிரிந்து செல்லலாம். அவர்கள் குறித்து ஒரு நாளும் கவலைப்பட மாட்டேன். தொகுதி சீரமைப்பு என அறிவித்தபோதே, எதிர்ப்பு தெரிவித்தேன். தமிழகத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் போட்டு பேச ஆயிரம் பிரச்னைகள் இருக்கின்றன; அக்கூட்டத்தால் எந்த பலனும் இல்லை.மக்கள் தொகை 40 கோடியாக இருந்த போது, 543 என்ற எண்ணிக்கையில் எம்.பி.,க்கள் தொகுதி இருந்தன. இன்று, 150 கோடியாக மக்கள் தொகை உயர்ந்துள்ளது. அதற்கேற்ப, பிரதிநிதிக்கான எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். மூன்று சட்டசபை தொகுதிகளுக்கு ஒரு எம்.பி., தொகுதியாக மறு சீரமைக்க வேண்டும்.இங்கு ஆட்சியில் இருப்போர் காசு கொடுத்து ஓட்டு வாங்கி, மக்களை ஏமாற்றுகின்றனர். மக்களின் வாழ்வு, நலம், எதிர்காலம், பாதுகாப்பு பற்றி எந்த கவலையும் இல்லை.தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஒருநாள் தொப்பி போட்டு வேடம் போடுகிறார். மக்களின் உணவுக்காக அல்ல, உணர்வுகளுக்கான உரிமைக்கானவன் நான். இப்படியெல்லாம் வேஷம் போடுவது விஜய்க்கு பிடித்திருக்கிறது; அதனால் செய்கிறார். யாருக்கும் பாதிப்பில்லை; விட்டு விடலாம். இவ்வாறு சீமான் கூறினார்.

விலையை உயர்த்து!

தி.மு.க., ஆட்சி அமைந்ததும், 'நீட்' தேர்வை ரத்து செய்வோம் என, தேர்தல் நேரத்து தந்திரமாக பொய் வாக்குறுதி அளித்து, இன்று வரை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகின்றனர். ஆனால், கரும்புக்கான குறைந்தபட்ச கொள்முதல் ஆதார விலையைக் கூடவா, தி.மு.க., அரசால் நிர்ணயிக்க முடியவில்லை. இதில், அரசுக்கு என்ன தயக்கம் உள்ளது. மத்திய அரசு வழங்கும் 3,150 ரூபாய் கொள்முதல் விலையை மட்டுமே வழங்குவது, விவசாயிகளுக்கு செய்யும் கொடுஞ்செயலாகும். எனவே, மத்திய அரசு 5,000 ரூபாய் வழங்குவதுடன், மாநில அரசு பங்காக 1,000 ரூபாய் சேர்த்து, 6,000 ரூபாய் கொள்முதல் விலையாக வழங்க வேண்டும்.-சீமான், தலைமை ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

अप्पावी
மார் 11, 2025 15:45

மத்த ஆளுங்களுக்கு சீமான் எவ்வளவோ தேவலை.


skv srinivasankrishnaveni
மார் 11, 2025 11:42

ஆஹா கரீஇக்ட்டா சொல்ல்லுராக மறைமுகமா ஐசிங் காமராசர் 2ம் கிளாஸ் .முக 3ம வகுப்பு நீண்ட காலம் சி எம் ஆக இருந்த பெருமைவேறு ஸ்டாலினுக்கு முக பிள்ளை என்ற பெருமை மட்டுமே ஜெயாம்மா மெட்ரிக் மஃர்ஸ்கூல்போகவே இல்லீயாம் காமராசர் தவிர மற்றவர்கள் மக்களை ஹிந்திபடிச்சால் நாசமாவும் தமிழ்நாடு என்ற கொள்கையே தான் . எல்லாமே சுயநலமே உருவானமுதல்வர்கள் மக்கள் வோட்டுப்போட்டால்போதும் என்ற பரந்த மனம் படிச்சவங்க


ராமகிருஷ்ணன்
மார் 11, 2025 11:36

யார் தமிழன் தகுதி, யார் அரசியல்வாதி தகுதி என்று நிர்ணயம் செய்து சான்றிதழ் தருவதற்கு இவர் யார். யார் இவருக்கு அதிகாரம் கொடுத்தது.


veeramani
மார் 11, 2025 09:10

திரு சீமான் கருத்திற்கு செட்டிநாடு சிட்டிசன் பதில் கருத்து. தைலநாடு மத்தியா அரசு அலுவலகங்களில் வேலை பார்ப்பதற்கு கண்டிப்பாக நுழைவு thervu yeluthi பாஸ் செய்திருக்கவேண்டும். இந்த சட்டம் பியூன் முதல் தலைமை அதிகாரி வரை செயல்படுத்தப்படுகிறது. ஆனால் சட்டசபை, பார்லிமென்ட் உறுப்பினர் தேர்விற்கு எந்த கல்வியும் தேவையில்லை. ஆனால் 25வயது நிறைவு பெற்றுக்க வேண்டும். இதுதான் தகுதி. இதேபோல ஒரு உயர்நீதிமன்றம் நீதிபதிக்கும் தேர்வு இல்லை. அங்கு ஒருவரது தொழில் திறன் பரிசீலிக்கப்படுகிறது. ஒரு மாவட்ட கலக்டருக்குத்தான் தெரியும் எவ்வாறு அரசை வழிநடத்தவேண்டும். இவரின் கருத்துப்படி சட்டசபை, பார்லிமென்ட் உறுப்பினருக்கு போஸ்ட் க்ராடூயட்டே MA, MSc படிப்பு தேவை. வரவேற்கிறேன்


scomments
மார் 11, 2025 06:10

மலையாளி சைமா , நீ சொல்வது சரி. அப்ப பாலியல் குற்றவாளிக்கும் தகுதி இல்லைனு வரும்


புதிய வீடியோ