உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை

ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை

பா.ஜ.,வினர் தேர்தலுக்கு முன்னர், தமிழ், தமிழர்கள் என்று பேசுவர். ஆனால், ஆட்சிக்கு வந்த பின் தமிழர்களை அவமதிப்பர். இது தான் பா.ஜ., கட்சி. தமிழகத்தில் அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணிக்கு வாய்ப்பு இல்லை. மதவாத சக்தியாக இருப்பதால் அந்தக் கட்சியுடன் கூட்டணி கிடையாது.தமிழகத்தில் அ.தி.மு.க., - தி.மு.க., என திராவிட கட்சிகள் தான் ஆட்சிக்கு வரமுடியும்.இங்கு, அ.தி.மு.க., - தி.மு.க., என யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை. நல்லாட்சிக்கு அது சரிப்பட்டு வராது.முல்லை பெரியாறு அணையில் உச்ச நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட அளவு நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும். பென்னிகுவிக் அணை கட்டி, ஐந்து மாவட்ட மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொடுத்தார். இப்பிரச்னையில் ஒரு வெள்ளைக்காரருக்கு இருந்த இளகிய மனசு முதல்வர் ஸ்டாலினுக்கு இல்லை.- செல்லுார் ராஜுமுன்னாள் அமைச்சர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

N Sasikumar Yadhav
செப் 16, 2024 10:52

இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவு கட்சியுடன் கூட்டணி வைத்த ஆயிஅதிமுக செல்லாத ராஜீ பாரதியஜனதா கட்சியை மதவாத கட்சி என சொல்ல தகுதியில்லை


Mani . V
செப் 16, 2024 06:11

கொள்ளையில் பங்கு கொடுத்தாலும் கொடுப்போம். ஆட்சியில் பங்கு என்ற பேச்சுக்கே இடமில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை