உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / காசி, கயாவுக்கு தீர்த்த யாத்திரை ரயில்

காசி, கயாவுக்கு தீர்த்த யாத்திரை ரயில்

சென்னை : திருநெல்வேலியில் இருந்து சென்னை வழியாக காசி, கயா உள்பட பல்வேறு இடங்களுக்கு புண்ணிய தீர்த்த யாத்திரை ரயிலை ஐ.ஆர்.சி.டி.சி., இயக்க உள்ளது.இந்திய ரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி., சார்பில், பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் வாயிலாக, புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சுற்றுலா ரயிலை இயக்கி வருகிறது.பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் திருநெல்வேலியில் இருந்து ஜூன் 6ம் தேதி புறப்படுகிறது. இந்த ரயில் கோவில்பட்டி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் மற்றும் சென்னை வழியாக காசி, பிரயாக்ராஜ், கயா மற்றும் அயோத்தி ஆகிய புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வர உள்ளது. ஒன்பது நாட்கள் கொண்ட இந்த பயணத்துக்கு ஒருவருக்கு 18,550 ரூபாய் கட்டணம். இது குறித்து, மேலும் தகவல் பெற 90031 40739, 82879 32070, 90031 40680 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என ஐ.ஆர்.சி.டி.சி., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

M Ramachandran
மே 07, 2024 03:56

நல்ல புனித சுற்றுலா நாம் தனியாக குடும்பத்துடன் பயணிக்கும் போது நம் இருக்கையில் வேரொருவர் ஆக்ரமித்திருந்தால் அந்த வண்டியின் பரிசோதகர் கண்டுகொள்ள மாட்டார்கள் தவிரா பதிவு செய்த தவிர தவிர பதிவு செய்யய்யாத பெட்டியை போல் பலர் பயணிக்க நம் உடமைக்கு உத்திரா வாதம் இல்லை கட்டணம் கூடுதனாலும் நம்பிக்கையயைக்கு உரியது மற்றும் காசி கயா இரண்டு இடங்கல்லை சிரமன்றி சென்று வரலாம் நாம் பயணித்தால் காசியிலிருந்து கயாவிற்கு ரைலிலோ பஸ்ஸிலோ செலாவது இயலாதா காரியம் வாடகைய்ய கார் மூலம் தான் செல்ல யியலும் அதன் கட்டணமும் அதிகமாகும் சம்மீபத்தில் நாங்கள் மூன்று குடும்பம் சென்று வந்தோம் ஒருவருக்கு ரூபாய் செலவு ஆனால் நாங்கள் குளிர்சாதன பெட்டியில் நம் உடமைய்யம் உத்திரவாதத்திற்கு ஆனாலும் அலகாபாத்திலிருந்து ஜபல்பூர் வரை பகல் நேரம் ரிஸர்வேஷன் செய்யாத வெளியார் கூட்டம் அதிகம் பயனிக்க வேண்டியதாயிற்று காசி வரை மட்டும் இதர இடங்களுக்கு டாக்ஸி மூலம் சென்று வந்தோம் மற்றும் அங்குமிடம் நாட்க்கள் ஒரு நாளைக்கு இருவர் தங்கும் அறைய்க்கு ரூபாய்


gubendher shinde
மே 07, 2024 19:59

நாட்டு மக்களின் வாழ்க்கை தரம் உயர்த்தி விட்டு நடுவன அரசுக்கு நன்றி சொல்லுங்கள் இல்லாவிட்டால் ஏ/சி யில் பயணம் செய்ய முடியுமா??? இனி பறக்கும் காலம் அருகில் உள்ளது


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை