உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 45 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

45 மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்ப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

திருக்குறள், 28 இந்திய மொழிகள், 35 உலக மொழிகளில் ஏற்கனவே மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. ஆசிய, ஆப்பிரிக்க, ஐரோப்பிய நாடுகளில் பேசப்படும், 28 மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்க, பலநாட்டு பதிப்பாளர்கள் முன்வந்துள்ளனர். இதைத் தொடர்ந்து, 45 பல்வேறு சர்வதேச மொழிகளில் கூடுதலாக மொழி பெயர்க்கப்பட்டால், ஐ.நா., சபையால் அங்கீகரிக்கப்பட்ட, 193 உலக நாடுகளில், அனைத்து அலுவலர் மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட நுால் என்ற பெருமை திருக்குறளுக்கு கிடைக்கும்.இதை அடுத்த மூன்றாண்டுகளில் நிறைவேற்றும் வகையில், தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம், பிற கல்வி நிறுவனங்களுடன் இணைந்து நிறைவேற்றும் வகையில், 133 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழர்கள் வாழும் இந்திய நகரங்களில் உள்ள பள்ளிகள், உலகத்தமிழ் மையங்களில் படிக்கும் மாணவர்களும் பங்கேற்கும் வகையில், கணினிவழி தேர்வு முறையில், 'உலகத் தமிழ் ஒலிம்பியாட்' போட்டி நடத்தப்படும்.மாநில, தேசிய, சர்வதேச அளவில் சிறப்பிடம் பெறும் மாணவர்களுக்கு பரிசு வழங்க, மொத்த பரிசுத் தொகையாக, 1 கோடி ரூபாய் வழங்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

anonymous
மார் 15, 2025 18:54

அடுத்த டுவிஸ்ட்டு கருணாநிதி தெலுகில் எழுதிய நூலை தமிழில் திருக்குறளாக காப்பியடித்தவர் திருவள்ளுவர் என்றும் கூறுவர்


Oru Indiyan
மார் 15, 2025 14:56

திருவள்ளுவர் படம் திவ்யமா இருக்கிறது


நாஞ்சில் நாடோடி
மார் 15, 2025 11:39

கமிஷன் அடிக்க திருக்குறளை பயன்படுத்துகிறார்கள்.


Kasimani Baskaran
மார் 15, 2025 10:36

ஒருபக்கம் திருக்குறள் மனிதக்கழிவு என்று சொன்ன கூட்டத்துடன் கும்மி - அடுத்த பக்கம் திருவள்ளுவரை மொழிபெயர்ப்பது... ஆக திராவிடம் என்பது முரண்பாடுகளின் மொத்த உருவம்.


PR Makudeswaran
மார் 15, 2025 10:24

ஊரை ஏமாற்ற உலகை ஏமாற்ற ஒரு புது வழி. ஏமாற்றி பிழைக்க ஒரு டிபார்ட்மென்ட் இருக்கும் போல.


Svs Yaadum oore
மார் 15, 2025 06:56

உலகத் தமிழ் ஒலிம்பியாட் போட்டி நடத்தப்படுமாம் ....அதில் தமிழனுக்கு மதம் கிடையாது , ஹிந்து என்ற வார்த்தையே தமிழில் கிடையாது , ஹிந்து என்றால் திருடன் , சமத்துவ பொங்கல் , மணிப்பூர் வடக்கன் எப்படி மத சார்பின்மையாக தமிழனாக மாறினான் , ராமசாமி தமிழனை படிக்க வைத்தான் , வள்ளுவர் எப்படி ராமசாமியிடம் தமிழ் கற்று கொண்டார் என்று உலகத் தமிழ் ஒலிம்பியாட் வைப்பானுங்க ...


Svs Yaadum oore
மார் 15, 2025 06:53

45 மொழிகளில் மொழிபெயர்த்து , அதில் வள்ளுவர் மேய்ப்பர் , வெள்ளை சால்வை போர்த்தியிருந்தார் ......புனித தோமையாரிடம் அ ஆ இ ஈ கற்று கொண்டு பிறகு ராமசாமி ஊக்கம் கொடுக்க வள்ளுவர் தமிழ் கற்றுக்கொண்டு , பிறகு எழுத்தாணி வைத்து திருக்குறள் எழுதினார் என்று மொழி பெயர்ப்பானுங்க ....


Oru Indiyan
மார் 15, 2025 06:29

சிரிப்புடா சாமி. மும்மொழி திட்டத்தை எதிர்க்கும் கூமுட்டைகள் யார் திருக்குறளை பிற மொழியில் மொழி பெயர்ப்பாளர்கள்? அவிங்களுக்கு மட்டும் தமிழும் பிற மொழியும் தெரிந்து இருக்கனுமாக்கும். சோக்கு சோக்கு.


vallarasu
மார் 15, 2025 20:17

Thiruvalluvar is shown here with Safran.. Why?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை