உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருமாவளவனின் மதுவிலக்கு கோரிக்கை; பதிலடி கொடுத்த அமைச்சர் நிர்மலா

திருமாவளவனின் மதுவிலக்கு கோரிக்கை; பதிலடி கொடுத்த அமைச்சர் நிர்மலா

புதுடில்லி : 'நாடு முழுதும் பூரண மதுவிலக்கை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் லோக்சபாவில் பேசியதற்கு பதில் அளித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 'இது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலினிடம் சொல்லுங்கள்' என தெரிவித்தார்.லோக்சபாவில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவித்து, விடுதலைச் சிறுத்தைகள் தலைவரும், சிதம்பரம் தொகுதி எம்.பி.,யுமான திருமாவளவன் நேற்று பேசினார். அப்போது அவர் பேசியதாவது: அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 47ல் நாடு முழுதும் போதைப் பொருள், சாராயத்தை முழுமையாக ஒழிக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், நாட்டில் பொது சிவில் சட்டம் கொண்டு வர முயற்சி செய்யும் மத்திய அரசு, மது ஒழிப்பை பற்றி கண்டு கொள்ளவில்லை. இந்திய அளவில் இளம் தலைமுறையினர் பாழாகி வருவதை எண்ணி வேதனை அடைகிறேன்.மத்திய அரசுக்கு இந்த வேதனை இருக்கிறதா என்று தெரியவில்லை. போதைப் பொருள் குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமின்றி, நாடு முழுதும் தாராளமாக கிடைக்கின்றன; கள்ளச் சாராயமும் காய்ச்சி விற்கப்படுகிறது. ஆகவே, இந்திய அளவில் பூரண மதுவிலக்கை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார். இதற்கு பதிலளித்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது:தேசிய அளவில் போதை பொருள் ஒழிப்பு மற்றும் மதுவிலக்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்துவதை வரவேற்கிறேன். ஆனால், திருமாவளவன் கூட்டணிக்கு தலைமை தாங்கும் தி.மு.க., தான் தமிழகத்தை ஆள்கிறது. அங்கே தான், கள்ளச்சாராயம் அருந்தி 56 பேர் சமீபத்தில் உயிரிழந்துள்ளனர். லோக்சபாவுக்கு வந்து, மத்திய அரசுக்கு அறிவுரை வழங்குவதற்கு முன், தமிழக முதல்வருக்கு வழங்குங்கள். போதைப் பொருட்கள் நடமாட்டம் தமிழகத்தில் தான் அதிகம் உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க., கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தமிழக எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக எழுந்து நின்று, மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, அவையில் சிறிது நேரம் கூச்சல் குழப்பம் நிலவியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 31 )

ஆரூர் ரங்
ஜூலை 03, 2024 15:49

சட்டப்படி மதுவிலக்கு மாநில அரசின் பொறுப்பு. மத்திய கூட்டணியா ஆட்சியில் 15 ஆண்டுகள் இருந்த திமுக என்ன செய்தது? சாராய ஆலை( பாலு, ஜகத்)முதலாளிகளை மத்திய அமைச்சர் பதவிகளில் உட்கார வைத்து அழகு பார்த்தது


theruvasagan
ஜூலை 03, 2024 15:39

ஜாதிவாரி கணக்கெடுப்பு ம‌த்‌திய அரசு நடத்த வேண்டும். நாடு தழுவிய மது விலக்கு ம‌த்‌திய அரசு அமல் படுத்த வேண்டும். ஆனால் நாடு தழு‌விய பொது சிவில் சட்டம் வேண்டாம். நாடு தழு‌விய NEET தேர்வு கூடாது. இவங்க வசதிக்கு ஏற்றார் போல் மத்திய அரசு தொட்டு கொள்ளும் ஊறுகாயாக இருக்கணும்.


JOTHIVELU NATARAJAN
ஜூலை 03, 2024 15:33

மத்திய அரசு சட்டம் இயற்ற வழி உள்ளதா, இல்லையா


Vivek
ஜூலை 03, 2024 12:17

இதற்கு மட்டும் மத்திய அரசு. நீட் குறித்து உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு உட்பட்டு நீட் நடக்கிறது.தேசிய கல்வி கொள்கை மத்திய அரசு அதனை தமிழக செயல்படுத்தாது.மதுவிலக்கு பீகார் அமுல் படுத்தியது போல தமிழக அரசினை அமுல்படுத்தச் ஏன் சட்டசபையில் விசிக மலை க்கள் குரல் எழுப்ப கூடாது.ஏன் வெளிநடப்பு கூடாது. MLA பதவியை ஏன் ராஜினாமா செய்யக்கூடாது.


Gurumurthy Kalyanaraman
ஜூலை 03, 2024 11:23

தன்னுடைய பிரச்சினைகளை ஒன்றிய அரசின் பிரச்சனை போல் திசை திருப்பி குளிர் காயலாம் என்று நினைத்தார் போலும். இதுதான் திராவிட மாடல்.


raja
ஜூலை 03, 2024 11:23

தமிழ் சமூகங்கள் போதை சமூகமாக உருவெடுக்கிறது அதைத்தான் திராவிடம் ஆதரிக்கிறது திமுக காரன் நடத்தகும் மது ஆலைகளை மூடினாள் அதற்க்கு விடிவுகாலம் பிறக்கும் தமிழகத்தை முதலில் காப்பாற்றுங்கள் அதன் பிறகு இந்தியாவை காப்பாற்றுவோம்....


DEENATHAYALU
ஜூலை 03, 2024 11:19

தேர்தலில் போட்டி இட பயந்த நீங்கள் பேச தகுதி அற்றவர்


s sambath kumar
ஜூலை 03, 2024 12:10

போட்டி போட்டு ஜெயித்தவர்கள் எல்லாம் அறிவாளிகளா என்ன? இதையே ஏன்யா சொல்லிகிட்டே இருக்கீங்க? ஜெயித்த அடிமைகளுக்கு இவர் அறிவாளி பரவாயில்லை.


TRUE INDIAN
ஜூலை 03, 2024 12:17

அப்போ மன்மோகன் சிங்க் போட்டி இன்றி 10 வருடம் பிரதமரா இருந்தாரே, அவருக்கும் தகுதி இல்லை அப்படித்தானே?


Anand
ஜூலை 03, 2024 11:11

இவனெல்லாம் மதுவிலக்கை பற்றி பாராளுமன்றத்தில் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பேசுகிறான்? இவனுக்கு கொஞ்சமாவது, சூடு, சொரணை, மானம், மரியாதை என ஒன்று இருக்கா? இங்கு கள்ளச்சாராயம் குடித்து கொல்லேபேர் மடிந்துக் கொண்டிருப்பதை கேட்க துப்பில்லை, தமிழ்நாடு போதைப்பொருள் மையமாக உருவெடுத்து எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கெடுத்து குட்டிசுவராக்கிக்கொண்டிருப்பதை கண்டிக்க திராணியில்லை, இவனெல்லாம் மீசையை வைத்துக்கொண்டு வேறு திரிகிறான். இழிஜென்மம்


Ambedkumar
ஜூலை 03, 2024 10:52

கால் துட்டு அளவுக்குமேல் அறிவு வேலை செய்வதில்லை உமக்கு


Veeraraghavan Jagannathan
ஜூலை 03, 2024 10:39

நீ என்ன பிஜேபிக்கு ஓட்டா போட்ட. ஓட்டு போடாத ஒங்களுக்கு எதற்கு செய்ய வேண்டும்.


மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ