மதவாதம் குறித்து திருமாவளவன் பேச்சு பா.ஜ., நயினார் நாகேந்திரன் விமர்சனம்
விழுப்புரம்: ''பெயரிலேயே மதத்தை வைத்துள்ள கட்சிகளுடன் கூட்டணி அமைத்துள்ள திருமாவளவன், மதவாத கட்சி என பிறரை பேசுவதா'' என பா.ஜ., பொதுச் செயலாளர் நயினார்நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.விழுப்புரத்தில் பா.ஜ., சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாமில் பங்கேற்ற அவரிடம், மது ஒழிப்பு மாநாட்டுக்கு, மதவாத கட்சியான பா.ஜ.,வை அழைக்கமாட் டோம் என திருமாவளவன் பேசியது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.அதற்கு நயினார் நாகேந்திரன், பெயரிலேயே மதத்தை வைத்துள்ள கட்சிகளுடன் தான் திருமாவளவன் கூட்டணி வைத்துள்ளார். எங்கள் கட்சி மதவாத கட்சியில்லை. கடந்த தேர்தலில், நெல்லையில் நான் போட்டியிட்டபோது, தி.மு.க., கூட்டணியினர் தான் மதம், சாதியை சொல்லி வாக்கு சேகரித்தனர். தி.மு.க., கூட்டணியில் உள்ள அவர், எங்களை ஏன் மாநாட்டுக்கு அழைக்க வேண்டும்' என்றார்.