உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!: சொல்கிறார் முதல்வர் ஸ்டாலின்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: திமுக ஆட்சி 3 ஆண்டுகள் நிறைவுபெற்றதையொட்டி, இது சொல்லாட்சி அல்ல, செயலாட்சி என முதல்வர் ஸ்டாலின் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.திமுக ஆட்சி பொறுப்பேற்று 3 ஆண்டுகள் நிறைவுபெற்றது. இது குறித்து எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: எனது அரசு அல்ல, நமது அரசு 4வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 3 ஆண்டுகள் நான் செய்து கொடுத்த சாதனைகள், திட்டங்கள், நன்மைகள் என்ன என்று தினம் தோறும் மக்கள் முகங்களில் இருக்கும் மகிழ்ச்சியே நல்லாட்சியின் சாட்சி. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=jya03pp3&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0திராவிட மாடல் அரசு செய்து கொடுத்த திட்டங்களை நான் சொல்வதை விட, பயன் அடைந்த மக்கள் சொல்வது தான் உண்மையான பாராட்டு. இது சொல்லாட்சி அல்ல. செயலாட்சி. மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது. நம்பிக்கையோடு முன்செல்கிறேன். பெருமையோடு சொல்கிறேன். மூன்றாண்டு தலைசிறந்தது. தமிழகம் தலைநிமிர்ந்தது. நாடும் மாநிலமும் பயனுற எந்தாளும் உழைப்பேன் என உறுதியேற்று ஆட்சிப் பயணத்தை தொடர்வேன். 3 ஆண்டு கால ஆட்சியில் ஸ்டாலின் என்றால் செயல், செயல் என நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 84 )

Sainathan Veeraraghavan
மே 10, 2024 19:12

ஜூன் தேதிக்கு பிறகு திமுக ஆட்சி சொல்லாட்சியா அல்லது செயலாற்ற ஆட்சியா என்று நன்கு தெரிந்து விடும்


G.Kirubakaran
மே 10, 2024 17:31

கள நிலவரம் தெரியாத ,பச்சை மண்ணு ஒரு ஆள் எதுக்குமே லாயக்கு இல்லைனா என்ன தான் பண்றது


Jaihind
மே 10, 2024 12:41

கருமம் கருமம்??


Mani . V
மே 10, 2024 06:34

வடிவேல் சினிமா சான்சு இல்லாமல் இருப்பதால், அவரின் இடத்தை இவர் பிடிக்க முயற்சி செய்கிறார்


கத்தரிக்காய் வியாபாரி
மே 10, 2024 01:19

ஆமா, நாங்க சும்மா கஞ்சா, கள்ளசாராயம்னு சொல்ல மாட்டோம் செஞ்சி , வித்து காட்டுவோம்


கத்தரிக்காய் வியாபாரி
மே 10, 2024 01:19

ஆமா, நாங்க சும்மா கஞ்சா, கள்ளசாராயம்னு சொல்ல மாட்டோம் செஞ்சி , வித்து காட்டுவோம்


Kanagaraj M
மே 09, 2024 16:31

மலையையும் மணலையும் திருடி விற்ற செயலாட்சி


Nagarajan
மே 09, 2024 12:14

அமைச்சர்களின் மரியாதை இல்லாத பேச்சு ஓசி கூட்டணியில் இருந்தும் காவேரி பிரச்சனையில் கர்நாடகத்திடம் இது குறித்து பேசுவதற்கு தைரியம் இன்மை போதை கலாச்சாரம் அதிகரிப்பு ஒரு அமைச்சர் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்களை ஒழுக்கம் இல்லாமல் பேசுகிறார் ஒரு அமைச்சர் மோடியை ஒருமையில் வைகிறார் ஒரு அமைச்சர் சனாதனஇந்து மதத்தை ஒழிப்போம் என்கிறார் இதை எதிர்த்து முதல் அமைச்சர் ஒரு கண்டன குரல் இல்லை மோசமான ஆட்சி மூன்று வருடங்களே சாட்சி


Kumar Kumzi
மே 09, 2024 07:57

உன்னால் துண்டுசீட்டு இல்லாமல் செயலாற்ற முடியுமா ஆவியாத அவியல் ஹீஹீஹீ


2020capital holdings
மே 09, 2024 07:19

மக்கள் கஷ்டம் அதிகம் ஆகி இருக்கிறது. போலீஸ் ஆட்சி நடக்கிறது இப்படிவே போனால் மக்கள் விடை கொடுத்து விடுவார்கள் இந்த ஆட்சிக்கு


மேலும் செய்திகள்





புதிய வீடியோ