உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இம்மாத பருப்பு, பாமாயிலை ஜூனில் பெறலாம்

இம்மாத பருப்பு, பாமாயிலை ஜூனில் பெறலாம்

சென்னை:உணவு வழங்கல் துறை ஆணையர் செய்திக்குறிப்பு:தமிழக அரசு, ரேஷன் கார்டுதாரர்களுக்கு, மாதம் 1 கிலோ துவரம் பருப்பு, 30 ரூபாய்க்கும்; லிட்டர் பாமாயில், 25 ரூபாய்க்கும் வழங்குகிறது. இந்த மாதத்தில் இதுவரை, 82.82 லட்சம் கார்டுதாரர்களுக்கு துவரம் பருப்பும்; 75.87 லட்சம் கார்டுதாரர்களுக்கு பாமாயிலும் வழங்கப்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில், 24.96 லட்சம் கிலோ பருப்பு; 33.57 லட்சம் லிட்டர் பாமாயில் உள்ளது. மேலும், 8.11 லட்சம் கிலோ பருப்பு; 7.15 லட்சம் லிட்டர் பாமாயில் கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. மீதமுள்ள பொருட்கள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெற்று, விரைவாக கிடங்குகளுக்கு அனுப்பப்படுகின்றன.இம்மாதத்தில் பருப்பு, பாமாயில் பெற முடியாதவர்கள் வசதிக்காக, ஜூன் முதல் வாரம் வரை, ரேஷன் கடைகளில் வழங்க வேண்டும் என, மாவட்ட வழங்கல் அதிகாரிகள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.இம்மாதம் துவரம் பருப்பு, பாமாயில் பெற இயலாத கார்டுதாரர்கள், அவற்றை ஜூன் முதல் வாரத்தில் வாங்கலாம்.இவ்வாறு கூறி யுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை