உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாதி படம் எடுத்து சம்பாதிப்போர் சமுதாய முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை : திருப்பூர் சுப்ரமணியம் வேதனை

ஜாதி படம் எடுத்து சம்பாதிப்போர் சமுதாய முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை : திருப்பூர் சுப்ரமணியம் வேதனை

திருப்பூர் : ஜாதியின் பெயரால் படம் எடுத்து கோடிகளை சம்பாதிக்கும் சினிமா துறையினர் தங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை. அதன் பெயரால் தங்கள் வாழ்வை மட்டுமே உயர்த்திக் கொள்கின்றனர், என தியேட்டர் உரிமையாளர் சங்க தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் தெரிவித்தார்.

ஜாதியை முன்னிறுத்தி படங்கள்

திருப்பூர் 'சக்தி' பிலிம்ஸ் சுப்ரமணியம் கூறியதாவது: தற்போது சினிமாவில் ஜாதியை முன்னிறுத்தி படம் எடுப்பது அதிகரித்து வருகிறது. சில ஆண்டு முன்னர் ஜாதி பெயர்களுடன் சினிமாக்கள் வந்தன. ஆனால் அவற்றில் பிற ஜாதிகள் குறித்து பேசாமல், கதைக்கு அவசியமானது குறித்து மட்டுமே இடம் பெற்றது. இன்று வெகுஜன மீடியாவான சினிமாவில், சிலர் குறிப்பிட்ட ஜாதியினரை மட்டுமே விளிம்பு நிலை மக்கள் என்ற ரீதியில், ஏதோ ஒரு காலத்தில் எங்கோ ஓரிடத்தில் நடந்த சம்பவத்தை பெரிது படுத்தியும், பிற ஜாதியை கொடூரமாகவும் சித்தரிக்கின்றனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7p4nwb92&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

சொகுசு வாழ்க்கை

எல்லா ஜாதியிலும் விளிம்பு நிலை, வறுமை நிலை மக்கள் உள்ளனர். ஜாதியை வைத்து படம் எடுத்து அதில் சம்பாதித்த யாரும் அவர்கள் குறிப்பிடும் அந்த விளிம்பு நிலை மக்களுக்கு எந்த உதவியோ, அவர்கள் முன்னேற்றத்துக்கான நடவடிக்கையோ எடுக்கவில்லை. தங்கள் வாழ்க்கைத் தரத்தை மட்டுமே உயர்த்திக் கொள்கின்றனர். சொகுசான வாழ்க்கை வாழ்கின்றனர். வசதியான வாழ்க்கை வாழ்வதை தவறு என்று சொல்லவில்லை. விளிம்பு நிலையிலிருந்து உயர்ந்த நிலைக்கு வந்தவர்கள் குறித்து நேர்மறை எண்ணங்களை தரும் வகையில் படம் எடுக்க வேண்டும்.

நிச்சயம் பிளாப் ஆகும்

முதல் பாதிவரை நல்ல கதைக் கருவை கொண்டு சென்று விட்டு, இரண்டாம் பாதியில் ஜாதியை புகுத்துவது தவறு. இதை எந்த ரசிகரும் ஏற்றுக் கொள்வதில்லை. இதனால் தான் இது போன்ற படங்கள் சில காட்சிகள் மட்டுமே நல்ல ரிசல்டை தருவதோடு, இரண்டாவது நாளிலேயே பிளாப் ஆகி விடுகிறது. எதிர்காலத்தில் இது போல் வரும் படங்கள் நிச்சயம் படுதோல்வியை மட்டுமே சந்திக்கும்.

சினிமாவுக்கு ஜாதி தேவையில்லை

மூன்று மணி நேரம் சினிமா பார்க்க வரும் ரசிகர்களை மகிழ்விக்கும் விதமாக படம் எடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஒரு ஜாதியினரை மற்றொரு ஜாதியினர் கொடுமைப்படுத்தியதாக சித்தரித்து, ஜாதி வெறியை துாண்டி, இரு பிரிவிடையே தேவையற்ற பகைமையை உருவாக்குகின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். ஆரோக்கியமான சினிமா துறைக்கு இது அவசியமில்லை.

இமேஜை சிதைக்கும் கலைஞர்கள்

இன்றைய நிலையில் ஜாதி பேதம் எங்கும் இல்லை. எந்த ஜாதியும் அந்தஸ்து தருவதில்லை. ஒருவரின் வாழ்க்கைத் தரம், பொருளாதாரம் ஆகியன தான் வேறுபாட்டை ஏற்படுத்துகிறது. யாரையும் துன்புறுத்தாமல், ஏமாற்றாமல் வாழ்வில் முன்னேற வேண்டும். எந்த கலைஞனையும் எந்த ரசிகனும் ஜாதி கண்ணோட்டத்தில் பார்ப்பதில்லை. சிலர் தங்கள் படைப்புகளில் தாங்களாகவே அதை வெளிப்படுத்திக் கொள்கின்றனர். திறமையான கலைஞர்கள் கூட இது போல் சினிமா எடுத்து தங்கள் இமேஜை சிதைத்துக் கொள்கின்றனர்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ms Mahadevan Mahadevan
ஆக 31, 2024 16:03

சுதந்திரம் வாங்கி 77 ஆண்டுகள் ஆகியும் அரசியல் சுக வாசிகளால் ஜாதி ஒழியாமல் வளர்ந்து இருக்கிறது. ஜாதி ஒழிய வேண்டும் என்ற எண்ணம் அரசியல் வாதிகளுக்கு கிடையாது


spr
ஆக 31, 2024 08:54

சிறப்பான கருத்தே சொல்லாத துணிச்சல் வந்ததற்காக இவரைப் பாராட்டுவோம் "ஜாதியின் பெயரால் படம் எடுத்து கோடிகளை சம்பாதிக்கும் சினிமா துறையினர் தங்கள் சமுதாய முன்னேற்றத்துக்கு எதுவும் செய்யவில்லை. அதன் பெயரால் தங்கள் வாழ்வை மட்டுமே உயர்த்திக் கொள்கின்றனர்" எப்படி பத்தினியாக, கண்ணகி சீதை என்றெல்லாம் நடிக்கும் நடிகைகளும் ஒருத்திக்கு ஒருவன் என்று வாழும் பண்பாளர், நேர்மையாளர் என்பது போல நடிக்கும் நடிகர்களுக்கும் அது தொழில் அவ்வளவே நிஜ வாழ்வில் அப்படியிருப்பதில்லை அது போலத்தான் இவர்களும். அது அவர்கள் தொழில் வருமானம் பெறும் வழி. ஆனால் மக்கள் எதனால் அதைப் பார்க்கிறார்கள்?


சுலைமான்
ஆக 31, 2024 08:43

பிற சாதியினரை இழிவுபடுத்தும் இயக்குனர்கள் மீது வழக்கு பதிந்து அவர்கள் வாழ்நாள் முழுவதும் படம் இயக்க தடை விதிக்க வேண்டும்.


கி ராஜராஜேஸ்வரி நன்மங்கலம்
ஆக 31, 2024 06:42

உண்மை உண்மை முற்றிலும் உண்மை.இதில் தாங்கள் மட்டுமே பாதிப்பு அடைந்தது போலவும் மற்ற எல்லா பிரிவினரும் சுகமாக இருப்பது போலவும் காட்டப்படுகிறது. உண்மையில் அனைத்து பிரிவிலும் ஏற்றத்தாழ்வுகள் இருப்பதுடன் அங்கும் கஷ்டப்பட்டு உழைத்து முன்னேறியவர்களும் இருக்கிறார்கள் என்ற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். தங்கள் வாழ்வாதாரத்தை உயர்த்திக் கொள்ள மட்டுமே இது போன்ற படங்களை எடுத்து விட்டு அதன் பின்னர் அந்த ஊருக்கோ மக்களுக்கோ எதுவும் செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இனிமேலாவது ஜாதி ரீதியாக படம் எடுப்பதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாக உள்ளது.


Sundar
ஆக 30, 2024 22:57

முற்றிலும் உண்மை. சினிமா டைரக்டர்கள் இதை உணர்ந்து இனிமேலாவது நல்ல கருத்துள்ள படங்களை, பொழுது போக்கு படங்களை கொடுக்க வேண்டும்.


Mr Krish Tamilnadu
ஆக 30, 2024 22:37

இத்தகைய படங்கள் தேவையற்றவை என நீங்கள் நினைத்தால், உங்கள் கருத்து சரி என உறுதியாக இருந்தால், நாங்கள் திரையிடவில்லை. படத்தின் கரு, வன்முறையை படம் பார்ப்பவர் மனதில் ஏற்படுத்தி தியேட்டர் பொருட்களை பதம் பார்க்கிறது என திரையிட மறுப்பு தெரிவியுங்கள். இத்தகைய படங்கள் வருவது தடை செய்யப்படும்.


Srinivasan k
ஆக 31, 2024 06:22

these are released by dmk controlled sources dmk controls theaters no longer by distributors so he is giving his opinion


venkat venkatesh
ஆக 30, 2024 22:13

correct


adalarasan
ஆக 30, 2024 22:12

நூறு சதவிகிதம் தஙகள் கருது சரியே > மேலும் சாதி பிரிவினை சண்டைகளும் அதிகரிக்கின்றன ?


Madhanagopal Kesavan
ஆக 30, 2024 21:15

சொல்லுவது சரியே. சம்பந்தப்பட்டவர்கள் யோசிக்க வேண்டும்


ஆரூர் ரங்
ஆக 30, 2024 21:10

பொய் சொல்லுறீங்க. எங்க ஈரோடு ஈர வெங்காய ஆளு எப்போவோ உலகத்தில் இருந்த எல்லா சாதியையும் ஒழிச்சுட்டாரே. இப்போ சாதின்னு எதுவுமே கிடையாது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை