உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொலையாளிகளுக்கு வெடிகுண்டு வாங்கி தந்த மூன்று பேர் சிக்கினர்

கொலையாளிகளுக்கு வெடிகுண்டு வாங்கி தந்த மூன்று பேர் சிக்கினர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:ஆம்ஸ்ட்ராங் கொலையாளிகளுக்கு வெடிகுண்டு வாங்கி கொடுத்த, மாநகராட்சி துாய்மை பணியாளர் மற்றும் சகோதரர்கள் இருவர் என, மூவர் கைது செய்யப்பட்டனர்.பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், 52, கொலை வழக்கில், ரவுடிகள், வழக்கறிஞர்கள், போலீஸ் எஸ்.ஐ., மகன் உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் திருவேங்கடம் என்ற ரவுடி என்கவுன்டரில் கொல்லப்பட்டார். இவ்வழக்கில், தனிப்படை போலீசார், சென்னை கோடம்பாக்கம் பூபதி நகர் முகிலன், 32; காமராஜர் நகர் விஜயகுமார், 21; விக்னேஷ், 27, என்ற மூவரை நேற்று கைது செய்தனர்.போலீசார் கூறியதாவது:விஜயகுமார், விக்னேஷ் இருவரும் சகோதரர்கள். முகிலன், சென்னை மாநகராட்சியில் துாய்மை பணியாளர். மூவரும், வடசென்னையைச் சேர்ந்த ரவுடி சம்பவ செந்திலின் கூட்டாளிகள். ஆம்ஸ்ட்ராங் கொலை சதியில் வெடிகுண்டு வீசும் திட்டமும் இருந்துள்ளது. இதற்காக, சம்பவ செந்தில், தன் கூட்டாளியான ராஜேஷ் என்பவரிடம், மூன்றுக்கும் மேற்பட்ட வெடிகுண்டுகளை ஒப்படைத்துள்ளார்.அந்த வெடிகுண்டுகளை, ராஜேஷிடம் இருந்து, விக்னேஷ், விஜயகுமார், முகிலன் ஆகியோர் வாங்கி, சென்னை ஜாம்பஜாரை சேர்ந்த ரவுடி தோட்டம் சேகரின் மனைவியும், வழக்கறிஞருமான மலர்க்கொடியிடம் கொடுத்துள்ளனர். பின் அந்த வெடிகுண்டுகளை, மலர்க்கொடி தன் கூட்டாளியான, புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஹரிஹரனிடம் ஒப்படைத்துள்ளார். இவர் வாயிலாகவே கொலையாளிகளுக்கு வெடிகுண்டு வினியோகம் செய்யப்பட்டுள்ளது.இவ்வழக்கில், மலர்க்கொடி, ஹரிஹரன் ஏற்கனவே கைதாகி பூந்தமல்லி கிளைச் சிறையில் உள்ளனர். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் இதுவரை, 21 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kanns
ஜூலை 29, 2024 12:13

Now its Clear that Advocates are Greedy Looters & Criminals


ஆரூர் ரங்
ஜூலை 29, 2024 10:38

நூறு பேரையாவது கைது செய்து லட்சம் பக்க குற்றப்பத்திரிகை கொடுங்க. ஆயிரம் பேரை சாட்சிகளாக சேருங்க. வழக்கு இன்ப ஆட்சிக்காலத்தில் கூட முடியாமல் பார்த்துக் கொள்ளவும். ஆனா செபாபு ஒண்ணப் புரிஞ்சிக்கணும். பழிவாங்க எத்தனை பேரை முடித்தாலும் சிறுத்தை கூட்டிக்கிட்டு போனது போனதுதான்.


sethu
ஜூலை 29, 2024 09:28

என்கவுண்டர் 30 பெருக்குமேல நடக்கும்போல ஜோடனை போகுது இனிமேல் எவனாவது பணத்துக்கு ஆசைப்பட்டு சரண்டர் ஆகக்கூடாது இது ஒரு பாடமாக அமையனும்.


maan
ஜூலை 29, 2024 08:59

இன்று வக்கீலுக்கு படிப்பவர்களெல்லாம் ப்ளஸ் டூவில் மார்க் கம்மியாக எடுத்து வேறு நல்ல படிப்பில் சேர முடியாதவர்கள்தான். இரண்டாவது கட்டப் பஞ்சாயத்து செய்யவும் அரசியல் செய்யவும் போலீஸை மிரட்டவும் வக்கீல் படிப்பு உதவுகிறது. ஆக குற்றவாளிகளில் லா பாஸ் செய்தவர்கள் இருப்பதில் வியப்பில்லை.


ponssasi
ஜூலை 29, 2024 08:44

ஒரு நபரை தீர்த்துக்கட்ட அணைத்து ரௌடிகளும் ஒன்றிணைத்துள்ளனர் எனில், இறந்தவன் எப்படிப்பட்ட ரௌடியாக இருந்திருக்கவேண்டும். இதுவரை பிடிபட்ட குற்றவாளிகளில் பெரும்பாலானோர் கொலையுண்டவர் சாதியை சார்ந்தவர். சென்னை எங்களுடையதுனு கொக்கரித்து கூட்டம் கொன்றவர்களை கண்டுகொள்ளாதது ஏன்.


K.Muthuraj
ஜூலை 29, 2024 11:44

இதிலே கொடுமையான உண்மை என்னவென்றால், திருமா கூட்டத்தினர், வேறு சாதியினரே தங்கள் சாதி தலைவனை கொன்று விட்டதாக தென் பகுதி மக்களை நம்ப வைத்தது தான்.


R.RAMACHANDRAN
ஜூலை 29, 2024 06:34

இந்த நாட்டில் வழக்கறிஞ்சர்கள் சட்டத்திற்கும் மேலானவராகலாக கருதிக்கொண்டு அனைத்து விதமான குற்றங்களையும் செய்கின்றனர்.நீதி மன்றங்களின் பெயரால் அவர்களை தப்பிக்க விடுவதால் இந்நிலை.


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி