உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மும்முனை மின்சாரம் இருந்தும் விவசாயத்திற்கு பயன்படவில்லை

மும்முனை மின்சாரம் இருந்தும் விவசாயத்திற்கு பயன்படவில்லை

மதுரை: மும்முனை மின்சாரம் கிடைத்தும் மின்னழுத்த தாழ்வு பிரச்னையால் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை என பாரதிய கிசான் சங்க விவசாயிகள் குமுறலை வெளிப்படுத்தினர்.சங்க தேசிய துணைத்தலைவர் பெருமாள், மாநில தலைவர் பாண்டியன், பொதுச்செயலாளர் சீனிவாசன், துணைத்தலைவர் பார்த்தசாரதி, பொருளாளர் ராம்நாத் கூறியதாவது:கடந்த 25 நாட்களாக மும்முனை மின்சாரம் பெறுவதில் விவசாயிகள் பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். வழக்கமாக 400 - 440 வோல்ட் மின்சாரம் கிடைத்தால் தான் 16 மணி நேரம் விவசாய மோட்டார், பம்புகளை இயக்கி தண்ணீர் பாய்ச்ச முடியும். தற்போது 12 மணி நேரம் தான் மின்சாரம் வழங்கப்படுகிறது. அதுவும் 300 முதல் 330 வோல்ட் மின்சாரம் மட்டுமே வழங்கப்படுவதால் மோட்டார்களை இயக்க முடியவில்லை. தாழ்வழுத்த பிரச்னையே இதற்கு காரணம். வாழை, தென்னை பயிர்களுக்கும் கோடை நெல் சாகுபடிக்கும் தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை. குறைந்தது 400 முதல் 440 வோல்ட் அளவுக்கு மும்முனை மின்சாரம் வழங்குவதோடு எந்தெந்த நேரங்களில் வழங்கப்படும் என்பதனை வட்டார வாரியாக விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின் அடிப்படையில் தொடர்புடைய மாநிலங்கள் 15 ஆண்டுகளுக்கு எந்த புதிய திட்டத்தையும் மேற்கொள்ளக்கூடாது. தேர்தல் அரசியலுக்காக மேகதாது அணை கட்டுவோம் என கர்நாடக அரசு அதற்கான முயற்சிகளை செய்து வருகிறது. மேலாண்மை வாரியக் கூட்டத்தில் இதுகுறித்த தீர்மானத்தை எதிர்க்காமல் தமிழக அரசு வெளிநடப்பு செய்தது வேதனையான விஷயம். விவசாயிகளின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் தமிழக முதல்வரும் நீர்ப்பாசனத்துறை அமைச்சரும் மவுனம் காப்பது ஏன். அரசின் நிலைப்பாட்டை பாசன உரிமையாளர்களாகிய எங்களுக்கு தெரிவிக்க வேண்டும். கர்நாடக அரசு எதேச்சதிகாரத்தோடு அணைகட்ட முற்பட்டால் பாரதிய கிசான் சங்கம் அனைத்து வழிகளிலும் எதிர்த்து போராடும்.தமிழகத்தில் கரும்பு, வாழை, செங்காந்தள் மலர் போன்ற குறிப்பிட்ட சில வணிக பயிர்கள் மட்டுமே சாகுபடி செய்யப்படுகிறது. வெளிநாடுகளில் அதிக விற்பனை வாய்ப்புள்ள 3000 வணிகப் பயிர்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. இவைகளை உற்பத்தி செய்ய தோட்டக்கலைத்துறை மற்றும் மூலிகை பயிர் சாகுபடி துறை மூலம் விவசாயிகளுக்கு அரசு உரிய வழிகாட்ட வேண்டும். காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை இல்லாததால் குறுவை சாகுபடி கேள்விக்குறியாக உள்ளது. டெல்டா விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய வேண்டாம் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டால் நல்லது. தற்போதைய பயிர் காப்பீடு திட்டத்தில் பருவநிலை பாதிப்பால் சாகுபடி செய்யப்படாத நிலங்களுக்கு இழப்பீடு கிடைக்கும். எனவே குறுவைக்கான இழப்பீடு தமிழக விவசாயிகளுக்கு கிடைக்கும் வகையில் காப்பீடு திட்டத்தில் இணைவதற்கு கால அவகாசம் வழங்க வேண்டும். நீர்மட்டம் குறைந்துள்ள மேட்டூர், வைகை அணைகளில் வண்டல் மண்ணை துார்வார தமிழக அரசு உத்தரவிட வேண்டும். இதன் மூலம் மேல் பகுதி வண்டல் மண்ணை உரமாக பயன்படுத்தமுடியும். நீர் ஆதாரங்களையும் ஆறுகளையும் பாதுகாக்க அமைக்கப்பட்ட தண்ணீர் பயன்பாட்டாளர்கள் நலசங்கத்தின் செயல்பாடுகள் விவசாயிகளுக்கு திருப்தி அளிக்கவில்லை. இதை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Kasimani Baskaran
மே 12, 2024 10:03

மும்முனையாவது நான்கு முனையாவது கூட்டணி முக்கியம் அதன் மூலம் சனாதனத்தை இந்து மதத்தை அழிக்க வேண்டும் இந்துக்களுக்கு விரோதமாக அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டும் இதுதான் திராவிடக்கோட்பாடு மாநிலம் முக்கியமில்லை - ஏனென்றால் திராவிடன் தமிழனில்லை தங்களை இந்து என்று சொல்லிக்கொண்டு தீம்காவுக்கு ஓட்டுப்போடும் உபிஸ் திருந்தினால் நிலமை மேம்படும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை