உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி: மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி: மத்திய அமைச்சர் முருகன் பேட்டி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'நீட் தேர்வு மற்றும் நிடி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார். இது ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி' என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறினார்.டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிடி ஆயோக் கூட்டத்தை காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி முதல்வர்கள் புறக்கணித்துள்ளனர். இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் எல்.முருகன் கூறியதாவது: நிடி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்ததன் மூலம் ஓட்டளித்த தமிழக மக்களுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பெரிய துரோகம் செய்துவிட்டார். அவர் தனது தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார்.

குழப்பத்தில் இருக்கிறார் ஸ்டாலின்

தமிழக மக்களுக்கு ஸ்டாலின் எப்போதும் தவறான தகவலை அளித்து வருகிறார். அவர் எப்போதும் குழப்பத்தில் இருக்கிறார். நீட் தேர்வு மற்றும் நிடி ஆயோக் கூட்டத்தை முதல்வர் ஸ்டாலின் புறக்கணிக்கிறார். இது ஜனநாயகத்தின் ஒட்டுமொத்த தோல்வி. இவ்வாறு எல்.முருகன் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 21 )

Ramamurthy N
ஜூலை 29, 2024 13:55

23 லஷத்திற்கு பட்ஜெட் போடுபவர்களுக்கு தமிழ்நாட்டில் அமையவுள்ள எய்ம்ஸுக்கு 2000 கோடிக்கு ஜப்பான் வங்கியில் கடன் வாங்க சொல்கிறார்கள், மற்ற மாநிலங்களில் மட்டும் மத்திய அரசின் நிதியுதவி ஏன்? நிதியமைச்சர் தமிழ்நாட்டிற்கு வள்ள நிவாரணம் மற்றும் மெட்ரோ ரயில் இயக்க நிதி ஒதுக்காதது ஏன் என்ற கேள்விக்கு திரு அண்ணாமலை அவர்களோ, மத்திய அமைச்சர் திரு முருகன் அவர்களோ பதில் தரலாமே?


nizam
ஜூலை 28, 2024 10:20

நீங்க மத்திய மந்திரியா உளவுத்துறை அதிகாரியா ஒரு சாதாரண மனுஷன் மாதிரி கூட சிந்திக்க முடியவில்லை தலைவிதி


Somu Saba
ஜூலை 28, 2024 00:15

If u do good things and giving due share to tami nadu u will also win but u people taliking only politics... Do good things winning automatic..


Ramani Venkatraman
ஜூலை 27, 2024 21:52

போன 2 வருஷமும் தான் நிதி ஆயோக் கூட்டத்துக்கு போகவில்லை... இப்போது போய் என்ன சாதிக்கப் போகிறோம் என்ற எண்ணமாக இருக்கலாம்...இதெல்லாம் பெரிசு பண்ணிகிட்டு.... ??


தமிழ்நாட்டுபற்றாளன்
ஜூலை 27, 2024 21:05

நீர் தேர்தலில் தோற்றவர் அதனால் நியமிக்க பட்டவர்


amuthan
ஜூலை 27, 2024 20:50

முதல்வர் தெளிவாக இருக்கிறார். நீங்கள் குழம்பி போய் இருக்கிறீர்கள். நீட் தேர்வில் 25000 மாணவர்களுக்கு அநீதி இழைத்தத்தை உலகம் ஓரு போதும் மறக்காது. பிஜேபி க்கு ஒட்டு போட்ட மாநிலங்களுக்கு மட்டும் சலுகை என்றால் தன் மானமுள்ள முதல்வர் ஏன் பங்கேற்க வேண்டும்.


amuthan
ஜூலை 27, 2024 20:50

முதல்வர் தெளிவாக இருக்கிறார். நீங்கள் குழம்பி போய் இருக்கிறீர்கள். நீட் தேர்வில் 25000 மாணவர்களுக்கு அநீதி இழைத்தத்தை உலகம் ஓரு போதும் மறக்காது. பிஜேபி க்கு ஒட்டு போட்ட மாநிலங்களுக்கு மட்டும் சலுகை என்றால் தன் மானமுள்ள முதல்வர் ஏன் பங்கேற்க வேண்டும்.


Pandianpillai Pandi
ஜூலை 27, 2024 19:07

பயத்தில் தாங்கள் உளர்வது அப்பட்டமாக தெரிகிறது. முன் வைக்கின்ற கோரிக்கைகளுக்கு பதில் தராமல் மழுப்பல் பேச்சாகத்தான் தெரிகிறது. பா ஜ க வின் எண்ணவோட்டத்தை வஞ்சக புத்தியை , மக்கள் மன்றத்தில் கொண்டுவந்திருக்கிறார். மக்களுக்கு பதில் அளிக்காமல் முதல்வரை குறைகூறுவது தங்களின் அரசியல் பிழைப்பு தன்மையைதான் காட்டுகிறது. கூட்டத்தில் ஒரு மாநிலத்தின் முதல்வர் பேசிக்கொண்டே இருக்கும்போது மைக் அனைக்கப்பட்டிருப்பதன் மூலம் பா ஜ க சகிப்புதன்மையற்ற கடமையற்ற நியாயமற்ற துரியோதனைப் போன்று கூட்டாளிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவமரியாதை செய்திருக்கிறார்கள் இதற்கான கூலியை இறைவன் தருவார்.


முருகன்
ஜூலை 27, 2024 18:12

பல மாநில முதல்வர் களை கூட்டத்திற்கு அழைத்து விட்டு உங்களுக்கு வேண்டிய முதல்வர்களுக்கு மட்டும் அதி முக்கியத்துவம் கொடுப்பது தான் பிரச்சினை


R.Balasubramanian
ஜூலை 27, 2024 17:44

போனால் ஒன்றும் புரியாது.


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி