| ADDED : ஜூலை 31, 2024 12:02 AM
சென்னை:போக்குவரத்து துறை செயலர் பணீந்திர ரெட்டி பிறப்பித்த உத்தரவு:சென்னை சாலை போக்குவரத்து நிறுவன கூடுதல் இயக்குனர் சிங்காரவேலு, மதுரை அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் மகேந்திரகுமார், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன கூடுதல் இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டு உள்ளார்சேலம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் பொன்முடி, கும்பகோணம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராகியுள்ளார்திருநெல்வேலி போக்கு வரத்து கழக நிர்வாக இயக்குனர் இளங்கோவன், சேலம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராகவும், கும்மிடிப்பூண்டி சாலை போக்குவரத்து நிறுவன கூடுதல் இயக்குனர் தசரதன், திருநெல்வேலி போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.