உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ரேஷன் ஊழியர்களுக்கு 10 கி.மீ.,க்குள் இடமாறுதல்

ரேஷன் ஊழியர்களுக்கு 10 கி.மீ.,க்குள் இடமாறுதல்

சென்னை:ரேஷன் கடைகளை கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், பல்வேறு கூட்டுறவு சங்கங்கள் நடத்துகின்றன.ஒரு சங்க ஊழியர்களை, வேறு சங்கத்திற்கு இடமாற்ற முடியாது. பல ஊழியர்கள் வீட்டில் இருந்து, 40 கி.மீ., முதல், 90 கி.மீ., தொலைவில் உள்ள சங்கங்களின் கடைகளில் பணிபுரிவதால் சிரமப்படுகின்றனர்; சம்பளத்திலும் வித்தியாசம் உள்ளது.எந்த கடைக்கும் இடமாற்றம் செய்யும் வகையில், பொது நிலைத்திறனின் கீழ் கொண்டு வருமாறு, ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான சாதக, பாதகம் குறித்து பரிசீலித்து, கூட்டுறவு துறைக்கு அறிக்கை அளிக்க, 2023ல், திருப்பூர் மண்டல இணை பதிவாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.குழு அறிக்கை விபரம் தற்போது வெளியாகியுள்ளது. சாதகமான அம்சத்தில், 'இடமாறுதல்கள் அனைத்தும் ஊழியர்கள் இருப்பிடத்திற்கு, 10 கி.மீ.,க்குள் மட்டுமே இருக்க வேண்டும்' என்று கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து, அரசு ரேஷன் கடை பணியாளர்கள் சங்க தலைவர் ஜி.ராஜேந்திரன் கூறுகையில், ''குழு, ஊழியர்களுக்கு சாதகமாக குறிப்பிட்டிருக்கும் அம்சங்களை அரசு உடனே அமல்படுத்த வேண்டும்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஏப் 19, 2024 07:19

ரேஷன் கடை பணியாளர்கள் அரசாங்கத்தின் பணியாளர்கள் இவர்களை கூட்டுறவு சங்க பணியாளர்கள் என அரசு சொல்கிறது கூட்டுறவு சங்கங்கள் சொல்கின்றன இவர்கள் எங்கள் பணியாளர்கள் இல்லையென இப்படியே ஆண்டுகளாக கொத்தடிமைகளாக நடத்தப்படுகின்றனர் நீதி மன்றங்களின் உதவியால் கிராம கடை திட்டம் பொது விநியோக திட்டம் என்பதெல்லாம் அரசின் திட்டங்களாகும் அரசு செலவில் இத்திட்டங்கள் செயல்படுத்தப்படும் நிலையில் சட்டத்தின் கண்களில் இவர்கள் அரசு ஊழியர்கள் ஆவர் இந்த நாட்டில் இந்திய அரசமைப்பு மற்றும் சட்டங்களில் உள்ளவாறு அரசின் மூன்று அங்கங்களும் செயல்படாததால் கோடி ரூபாய் அளவிற்கு இவர்களிடம் அரசு சம்பளம் குறைத்து நிர்ணயம் செய்து சுரண்டியுள்ளது இதுவரை


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி