உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மட்டன் பிரியாணி, மீன் வறுவல், சிக்கன் தொக்கு.. : உதயநிதி வீட்டில் உழைத்தோர்களுக்கு விருந்து

மட்டன் பிரியாணி, மீன் வறுவல், சிக்கன் தொக்கு.. : உதயநிதி வீட்டில் உழைத்தோர்களுக்கு விருந்து

சென்னை : லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றது. அதற்காக உழைத்த கட்சி பொறுப்பாளர்களை உபசரிக்கும் வகையில், சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள, குறிஞ்சி இல்லத்தில், நேற்று அமைச்சர் உதயநிதி விருந்து அளித்தார். தி.மு.க., ஒருங்கிணைப்பு குழுவை சேர்ந்த அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, அமைப்பு செயலர் ஆர்.எஸ்.பாரதி தவிர, வேறு யாருக்கும் அழைப்பு இல்லை. டாக்டர் கோகுல், மணிமாறன், ஹெலன் டேவிட்சன், அஞ்சுகம், ராணி, முத்துசெல்வி உட்பட 234 சட்டசபை தொகுதி பொறுப்பாளர்களும் பங்கேற்றனர். உதயநிதி பேசுகையில், ''லோக்சபா தேர்தல் வெற்றிக்கு பாடுபட்ட அனைவருக்கும் நன்றி. அதே சிந்தனையில், சட்டசபை தேர்தல் வெற்றிக்கும் பணியாற்ற வேண்டும்,'' என்றார்.சீரக சம்பா மட்டன் பிரியாணி, வஞ்சிரம் மீன் வறுவல், மிளகு கொத்துக் கோழி, மட்டன் கோலா உருண்டை, சிக்கன் தொக்கு, பரோட்டா, முட்டை தோசை, நாட்டுக்கோழி குருமா, தயிர் பச்சடி மற்றும் மாம்பழம் ஸ்வீட் ரோல், முந்திரி பிரட் அல்வா உள்ளிட்ட அசைவம் மற்றும் சைவ உணவு வகைகள், விருந்தில் பரிமாறப்பட்டன.இந்த உணவு வகைகளை, பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் குழுவினர் தயாரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 60 )

P. Sampath P. Sampath
ஜூலை 30, 2024 10:15

வெரி நைஸ் meals


மு. செந்தமிழன்
ஜூலை 28, 2024 07:12

வேலை பார்த்தது மோட்டார் ஸ்விட்ச்க்கு ஏன் பூசை பன்றீங்க. நான் ஒரு எலெக்ட்டிரிகள் என்ஜினீயர்


xyzabc
ஜூலை 28, 2024 06:49

Yummy stuff வோட்டர்ஸ் வாழ்க


Godyes
ஜூலை 27, 2024 18:29

தெனாவெட்டான நடை உடை பாவனை கரகர அடிவெட்டு பேச்சு மேற் பார்வை வரணும்னா இதல்லாம் சாப்பிடணும்.


Godyes
ஜூலை 27, 2024 18:25

தலைவராகணுமனாக்கா இதல்லாம் அடிக்கடி சாப்பிடணும்.


Sivan Balraj
ஜூலை 28, 2024 20:50

வெரி குட் சூப்பர்


Godyes
ஜூலை 27, 2024 15:41

ஓட்டு கேட்க வரும் போது மக்ககளுக்கு இந்த மாதிரி கனமான சாப்பாடு போடணும்.அப்பதான் ஓட்டு போடுவோம்.பிச்ச காசு ஆயிரம் ரூபாயில் இதெல்லாம் வாங்கி சாப்பிட முடியாதுன்னு சொல்லணும்.


Godyes
ஜூலை 27, 2024 15:35

ஏன் பதினோரு வகையான உணவு புடிக்குமா சாதம் ரசம் குழம்பு புடிக்காதாப்பா.


Godyes
ஜூலை 27, 2024 14:47

மட்டன் பிரியாணி சாப்ட்றவங்க உழைச்சாங்களா இன்னாய்யா கொயப்புறீங்க


Krishnamurthy Venkatesan
ஜூலை 27, 2024 12:10

பட்ஜெட் சூப்பர்.


Ramesh R
ஜூலை 26, 2024 17:03

நீங்கள் வகை வகை யாக சாப்பிடுவதை போல அனைவரும் சாப்பிட வழிவகை செய்யுங்கள்


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி