உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இருமன்குள மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

இருமன்குள மக்கள் தேர்தல் புறக்கணிப்பு அதிகாரிகளுக்கு தீர்ப்பாயம் உத்தரவு

சென்னை:விவசாயத்துக்கு பாதிப்பு ஏற்படுத்திய, கல் குவாரியை மூட வலியுறுத்தி, தென்காசி இருமன்குள மக்கள் லோக்சபா தேர்தலை புறக்கணித்தது குறித்து, அறிக்கை தாக்கல் செய்யும்படி, சுரங்கத் துறை, மாவட்ட நிர்வாகம், மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு, தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தாலுகா, இருமன்குளம் கிராமத்தில், 15 ஏக்கர் பரப்பளவில் கல் குவாரி உள்ளது. இதனால், கிராமத்தில் உள்ள இரு குளங்களுக்கு, தண்ணீர் வருவது தடைபட்டு, 1000 ஏக்கரில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல் குவாரியை மூட வலியுறுத்தி, கடந்த ஏப்ரல் 19ல் நடந்த லோக்சபா தேர்தலை, அப்பகுதி மக்கள் புறக்கணித்தனர். இது தொடர்பாக பத்திரிகைகளில் செய்தி வெளியானது.அதன் அடிப்படையில், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் முதல் அமர்வு, தாமாக முன்வந்து வழக்கு பதிந்து, வழக்கை சென்னையில் உள்ள தென் மண்டல அமர்வுக்கு மாற்றியது. இந்த வழக்கை, தீர்ப்பாய நீதிபதி புஷ்பா சத்யநாராயணா, நிபுணர் குழு உறுப்பினர் சத்யகோபால் விசாரித்தனர்.கல் குவாரியால், பெரியகுளம், தோணுகால்குளம் என இரண்டு குளங்களுக்கு பாசன நீர் தடைபட்டதால், இருமன்குளம் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர்.இது தொடர்பாக, ஆவணங்கள் அடிப்படையில், புவியியல் மற்றும் சுரங்க துறை, மத்திய, மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியங்கள், மாவட்ட நிர்வாகம் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை வரும் செப்.,30க்கு தள்ளி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை