உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பி.சி., பட்டியலில் துளுவ வெள்ளாளர் தனி பிரிவாக சேர்ப்பு

பி.சி., பட்டியலில் துளுவ வெள்ளாளர் தனி பிரிவாக சேர்ப்பு

சென்னை:பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில், துளுவ வெள்ளாளர் சமூகம் தனி பிரிவாக சேர்க்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக வெளியிட்டுள்ள அரசாணை:தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில், அகமுடையார் உள்ளிட்ட தொழு அல்லது துளுவ வெள்ளாளர் என்று இருந்தது. இது, குழப்பத்தை ஏற்படுத்துவதால், துளுவ வெள்ளாளர் சமூகத்தை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் தனியாக சேர்க்க வேண்டும் என, துளுவ வெள்ளாளர் சங்கங்களிடம் இருந்து மனுக்கள் வந்துள்ளதாக, பிற்படுத்தப்பட்டோர் ஆணைய தலைவர் கடிதம் அனுப்பியுள்ளார்.இந்த இரு சமூகங்களையும் தனித்தனியாக குறிப்பிடுவது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக அகமுகடையார் சமூகத்தினர் பெற்ற சலுகைகளை எந்த வகையிலும் பாதிக்காது. எனவே, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் அகமுடையார் தனியாகவும், தொழு அல்லது துளுவ வெள்ளாளர் தனியாகவும் சேர்க்கப்படுகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை