மேலும் செய்திகள்
பள்ளி பேருந்து சக்கரத்தில் சிக்கி 4 வயது குழந்தை பலி
52 minutes ago
திருச்சி,:திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள நாகலாபுரத்தைச் சேர்ந்தவர் கூலித்தொழிலாளி சேகர் 60. இவரது மனைவி தனக்கொடி 58. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மதியம் முசிறியில் நடந்த உறவினர் வீட்டு வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.நிகழ்ச்சி முடிந்து மாலை அவர்கள் நாகலாபுரம் கிளம்பி கோட்டத்துார் பிரிவு சாலையில் சென்ற போது பின்னால் வந்த கார், இரு சக்கர வாகனம் மீது மோதியதில் சேகரும், அவர் மனைவி தனக்கொடியும் படுகாயமடைந்து உயிரிழந்தனர். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிந்து காரை ஓட்டி வந்த கோவையைச் சேர்ந்த பூபதி 39 என்பவரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
52 minutes ago