உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கைதுக்கு உதயநிதி காரணம்: சவுக்கு சங்கர்

கைதுக்கு உதயநிதி காரணம்: சவுக்கு சங்கர்

ஆத்துார்:''என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்,'' என, சவுக்கு சங்கர் தெரிவித்தார்.சென்னையை சேர்ந்த, யு - டியூப் சவுக்கு சங்கர் பேசியது தொடர்பாக, ஊட்டி சைபர் கிரைமில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக புழல் சிறையில் இருந்த அவரை, கடந்த, 29ல், ஊட்டி போலீசார், காவலில் எடுத்து விசாரித்தனர். நேற்று காலை, 7:00 மணிக்கு, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் மீனப்ரியா தலைமையில், 17 போலீசார், சேலம் வழியே சென்னைக்கு, 'சிசிடிவி' பொருத்திய போலீஸ் வேனில், அவரை அழைத்துச் சென்றனர்.சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே வந்தபோது, வயிறு வலி, மயக்கம் வருவதாக கூறினார். தொடர்ந்து மயக்கம் அடைந்தார். மதியம், 12:30 மணிக்கு அவரை, ஆத்துார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இ.சி.ஜி., உள்ளிட்ட பரிசோதனை செய்து, 'குளுக்கோஸ்' போடப்பட்டது. பின், வயிறு வலிக்கு மருத்துவ குழுவினர் மாத்திரை வழங்கினர். 1:30 மணிக்கு போலீசார் எடுத்துச்சென்ற தயிர் சாதத்தை சாப்பிட, அவர் மறுத்துவிட்டார். மதியம், 2:40க்கு அவரை, போலீசார் வேனில் ஏற்றினர்.அப்போது பத்திரிகையாளர்கள் கைது குறித்து கேட்டனர். அதற்கு அவர், ''என் மீது மேலும் மேலும் பொய் வழக்குகள், அமைச்சர் உதயநிதி உத்தரவால் போடப்பட்டு கைது செய்து வருகின்றனர். என் கைதுக்கு அமைச்சர் உதயநிதி தான் காரணம்,'' என்றார். தொடர்ந்து அவர் பேச முயன்ற நிலையில், போலீசார் வேன் கண்ணாடி ஜன்னலை மூடிவிட்டனர். பின் புழல் சிறைக்கு அழைத்துச்சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

v j antony
ஆக 02, 2024 22:36

ஆட்சி அதிகாரத்தில் உள்ள அரசு எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதை இவரின் கைதால் தெரிந்துகொள்ளமுடிகிறது விமர்சனங்களை எதிர்கொண்டு பதிலடி செயல்பாடுகள் மூலம் செயல்படுத்த வேண்டும் கைது மூலம் திமுக அரசு மிக மிக தவறான பாதையில் செல்கிறது.சமூக நீதி எனும் வார்த்தையை உச்சரிக்க வேண்டாம்


p murugan
ஆக 02, 2024 14:53

அப்போகூட திருந்த மாட்டான் தான் செய்தது தப்பு என்று உணரல ...


Kesavan
ஆக 02, 2024 07:33

இது ஒரு மிகவும் மகிழ்ச்சியான செய்தி உன்ன மாதிரி கழிசடை எல்லாம் கைது செய்ய உதயநிதி காரணமாக இருக்கிறார் என்பது பெருமைக்குரிய விஷயம்


R Panneer Selvam
ஆக 01, 2024 21:37

இவன் கொழுப்பு இன்னும் அடங்கவில்லை


SVK SIMHAN
ஆக 01, 2024 20:30

ஆக..... தமிழகத்தின் அவலங்களை கண்டு வாயை திறக்கவே கூடாது. மனித மாண்புகளை வேரோடு அழித்து கொண்டிருக்கும் திராவிட போதை கலாச்சாரத்தில் கண்ணியம் கட்டுப்பாடு கடமை எல்லாம் உதயசூரியன் உதித்த தருணமே கருகி விட்டது.???????


Bala Subra Manian
ஆக 01, 2024 20:06

உன்னையெலாம் வெளியே விட கூடாது.


மமனோகர்
ஆக 01, 2024 13:07

கஞ்சா வைத்திருக்க உதயநிதியா சொன்னார்? பெண்களை அவமதிக்க உதயநிதியா சொன்னார்? கட்டுக்கதைகள் சொல்ல உதயநிதியா சொன்னார். போலியாய் குற்றம் சுமத்தி,சட்டத்திற்கு புறம்பாக பணவசூல் செய்ய உதயநிதியா சொன்னார். சவுக்கு இதை எல்லாம் புரிந்து கொள்ளும் திறன் இல்லாமல் இருக்கிறார்.


Nandakumar Naidu.
ஆக 01, 2024 13:28

பெண்களை அவதூறாக பேசியது தவறுதான். ஆனால் மற்ற கைதுகள் எல்லாம் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஆணவத்தால் போடப்பட்டது தான். சவுக்கு சொல்வதிலும் உண்மை இருக்கத்தான் செய்கிறது.


K.Rajkumar
ஆக 01, 2024 09:20

யாகாவாராயினும் நா காக்க காவாக்கவ் சோகாப்பர் சொல்லிழுக்கு பட்டு


RAAJ68
ஆக 01, 2024 07:47

கர்மம் தன் கடமையைச் செய்யும்..... பிறருக்கு இன்னா மதியம் செய்யின்.....


மேலும் செய்திகள்









புதிய வீடியோ