உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / மார்ச் 16ல் வைரமுத்துவின் படைப்பிலக்கிய கருத்தரங்கம்

மார்ச் 16ல் வைரமுத்துவின் படைப்பிலக்கிய கருத்தரங்கம்

சென்னை:சென்னையில், மார்ச் 16ம் தேதி, கவிஞர் வைரமுத்துவின் படைப்பிலக்கியம் குறித்த, 'வைரமுத்தியம்' பன்னாட்டு கருத்தரங்கம் நடக்க உள்ளது.இலக்கிய பொது வாழ்வில், கவிஞர் வைரமுத்து அரை நுாற்றாண்டைக் கடந்துள்ளார். கடந்த 1972ல் அவரது முதல் கவிதை நுாலான, 'வைகறை மேகங்கள்' வெளியானது. இதுவரை 39 நுால்கள் வெளியாகி உள்ளன; 7,500 பாடல்கள் எழுதி உள்ளார்.வைரமுத்துவின் படைப்பிலக்கியம் குறித்த, பன்னாட்டு கருத்தரங்கம், மார்ச் 16ல் சென்னை, லீலா பேலஸ் நட்சத்திர ஹோட்டலில் நடக்க உள்ளது. உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் கருத்தரங்கை துவக்கி வைக்கிறார். 'வைரமுத்தியம்' ஆய்வு நுாலை, முதல்வர் ஸ்டாலின் வெளியிட, ஜெகத்ரட்சகன் எம்.பி., பெற்றுக் கொள்ள உள்ளார். 'வைரமுத்து மகா கவிதை' என்ற ஆங்கில நுாலை, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வெளியிட, மலேசிய முன்னாள் அமைச்சர் டத்தோஸ்ரீ சரவணன் பெற்றுக் கொள்கிறார்.நான்கு அமர்வுகளாக நடக்கும் கருத்தரங்கில் சுவிட்சர்லாந்து, சீனா, மலேசியா, சிங்கப்பூர் நாடுகளின் தமிழறிஞர்கள், இந்திய பல்கலைகளின் பேராசிரியர்கள் 22 பேர் கட்டுரை வாசிக்க உள்ளனர். கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை நடத்தும் இந்த கருத்தரங்கில், தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் மட்டுமே பங்கேற்க உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை