உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆவணத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடர் போராட்டத்திற்கு வி.ஏ.ஓ.,க்கள் முடிவு

ஆவணத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணி தொடர் போராட்டத்திற்கு வி.ஏ.ஓ.,க்கள் முடிவு

கம்பம்:வருவாய்த் துறையின் அடங்கல் ஆவணத்தை டிஜிட்டல் மயமாக்கும் பணி மேற்கொள்ள தேவையான வசதிசெய்து தர வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்த உள்ளதாக வி.ஏ.ஓ.,சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.வருவாய்த்துறை சிட்டா என்பது நிலம் யார் பெயரில் உள்ளது , அடங்கல் என்பது அந்த நிலத்தில் என்ன பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் ஆவணமாகும். அடங்கல் ஆவணத்தை டிஜிட்டல் மயமாக்க மாநில வருவாய் நிர்வாக ஆணையர் கடந்தாண்டு உத்தரவிட்டார். வி. ஏ.ஓ., க்கள் மூலம் பணிமேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. தேனி மாவட்டத்தில் இதுவரை 18 சதவீத பதிவு செய்துள்ளனர்.வி.ஏ.ஓ.க்கள் சங்க மாவட்ட செயலாளர் ராமர் கூறுகையில் ஒரு வி.ஏ.ஓ., விற்கு குறைந்தது 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் சர்வே எண்கள் உள்ளது. ஒவ்வொரு சர்வே எண் கொண்ட நிலத்திற்கும் நேரில் சென்று 20 மீட்டர் துாரத்தில் நின்று போட்டோ எடுத்து செயலியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். அது சிரமமானது. அதை 5 மீட்டர் தூரமாக குறைக்க வேண்டும். அதே நிலத்தில் நின்று 16 வகையான பதிவுகளை மேற்கொள்ள வேண்டும். சர்வர் பழுது, இணைய சேவை கிடைக்காதது என பல பிரச்னைகள் உள்ளது.எனவே 500 எக்டருக்கு ஒரு பணியாளர் நியமித்து, ஒரு பதிவிற்கு ஊக்கத் தொகையாக ரூ.10 வழங்க வேண்டும். அத்துடன் களப்பணிக்கு எளிதாக கொண்டு செல்ல டேப்ளட் கம்ப்யூட்டர் வழங்க வேண்டும். இக் கோரிக்கைகளை வலியுறுத்திசெப். 9 ல் தாலுகா அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. செப்., 17ல் ஆர்.டி.ஓ.அலுவலகங்கள் முன்பும், செப்.,30ல் கலெக்டர் அலுவலகம் முன்பும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம். பேச்சுவார்த்தைக்கு அழைக்காவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை