மேலும் செய்திகள்
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
51 minutes ago | 1
12 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
11 hour(s) ago | 1
டிசம்பரில் மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம்
12 hour(s) ago
சென்னை:போக்குவரத்து ஆணையர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள அறிவிப்பு: கடந்த மாதம், 13ம் தேதி வாகன புகை பரிசோதனை மையங்களில், திடீர் சோதனை நடத்தப்பட்டது. அதில், 50 மையங்களில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டறியப்பட்டது.முறைகேடுகளை தடுக்க தொழில்நுட்பங்களை புகுத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி, PUCC 2.0 Version என்ற, மொபைல் போன் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.இந்த செயலி, வாகனப்புகை பரிசோதனை மையத்துக்கு என, தனிப்பட்ட மொபைல்போன் உரிமைதாரரால் பயன்படுத்தப்படும்.அந்த மொபைல் போனில், இந்த செயலியை நிறுவி இயக்க வேண்டும். இது, ஜி.பி.எஸ்., வசதியுடன் கூடியது. இந்தச் செயலி, வாகன புகை பரிசோதனை மையத்திலிருந்து, 30 மீட்டர் சுற்றளவுக்குள் மட்டுமே செயல்படும்.இதன் வாயிலாக, வாகன புகை பரிசோதனை செய்யும் போது, இரண்டு புகைப்படங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும்.ஒன்று வாகன பதிவெண்ணை தெளிவாக காட்டும்படியும், மற்றொன்று வாகன பதிவெண், புகை பரிசோதனை மையத்தின் பெயர் பலகை மற்றும் அங்கீகரிக்கப்பட்ட சோதனையாளர் ஆகிய மூன்றும் ஒருசேர இடம்பெறும் புகைப்படமாக எடுக்கப்பட வேண்டும்.மேலும், அங்கீகரிக்கப்பட்ட நபர், அந்த வாகனத்தை சோதனையிடும் போது எடுக்கப்பட்ட, வீடியோ பதிவையும் பதிவேற்ற வேண்டும். இவை மூன்றையும் பதிவேற்றம் செய்யாமல், இந்த செயலியை பயன்படுத்த இயலாது. இவை பதிவேற்றம் செய்யப்பட்டால் தான், புகை பரிசோதனை சான்றிழை பதிவிறக்கம் செய்யவோ அல்லது பிரின்ட் எடுக்கவோ இயலும்.ஜி.பி.எஸ்., எனப்படும், புவியிட குறியீடு இருப்பதால், சோதனை மையத்திற்கு வாகனங்களை கொண்டு வராமலேயே புகை பரிசோதனை இனி செய்ய இயலாது. நாட்டில் மூன்றாவது மாநிலமாக, தமிழகத்தில் இந்த புதிய நடைமுறை, வரும் 6ம் தேதி முதல் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான செயல்முறை விளக்கத்தை, வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் இன்று வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் வழங்குவர். இந்த புதிய செயலி வாயிலாக மட்டுமே, வாகனப் புகைப் பரிசோதனைகளை செய்ய வேண்டும். தவறும் மையங்கள், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடி, 'சீல்' வைக்கப்படும்இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
51 minutes ago | 1
11 hour(s) ago | 1
12 hour(s) ago