உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கொடி, பாடல் இன்று ரிலீஸ்; குஷியில் நடிகர் விஜய்

கொடி, பாடல் இன்று ரிலீஸ்; குஷியில் நடிகர் விஜய்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை, அக்கட்சியின் தலைவரும், நடிகருமான விஜய், சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் இன்று அறிமுகம் செய்கிறார். கட்சியின் கொள்கைகள், எதிர்கால திட்டங்கள் அடங்கிய பாடலையும் வெளியிடுகிறார். தமிழக வெற்றிக் கழகம் கட்சியை துவக்கியுள்ள விஜய், 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளார். அதற்கு முன், கட்சியின் பெயர் மற்றும் கொடியை, மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான நடவடிக்கைகளை துவக்கி உள்ளார்.கடந்த 19ம் தேதி பவுர்ணமி நாளில், சென்னை பனையூரில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில், மஞ்சள் நிறத்துடன் நடுவில் விஜய் படம் இருப்பது போன்ற கொடியை அதற்கான கம்பத்தில் விஜய் ஏற்றினார். இன்று பொதுமக்களுக்கும், தொண்டர்களுக்கும் கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட உள்ளது.விஜய் அறிக்கை: சரித்திரத்தின் புதிய திசையாகவும், புதிய விசையாகவும் ஒவ்வொரு நாளும் அமைந்தால், அது ஒரு பெரும் வரம். அப்படியான வரமாக இறைவனும், இயற்கையும் நமக்கு அமைத்து கொடுத்திருக்கும் நாள் தான் இன்று. தமிழகத்தின் நலனுக்காக உழைத்து, நம் மாநிலத்தின் அடையாளமாகவும் மாறப்போகும் நம் வீரக் கொடியை, வெற்றிக் கொடியை, இன்று தலைமை நிலைய செயலகத்தில் அறிமுகப்படுத்தி, கட்சிக் கொடிப் பாடலை வெளியிட்டு, கட்சிக் கொடியை ஏற்றி வைக்கிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Raja Vardhini
ஆக 22, 2024 17:15

ஜோசப் விஜய் ஐயோ பாவம்...... மிசினரிகள் ஆதரவில் வென்று விடலாம்.... பணம் கிடைக்கும் என்று மனப்பால் குடிக்கும் ஜோசப் விஜய்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... புலியை பார்த்து சூடு போட்ட கதையாக.... எம்.ஜி.ஆர் என்று நினைப்பு.


Ramesh Sargam
ஆக 22, 2024 12:21

கொடி, பாடல் மட்டும்தானா? சரக்கு, பிரியாணி, போகவர ஆட்டோ செலவு எதுவும் கிடையாதா...?


கோவிந்தராசு
ஆக 22, 2024 12:11

எனத்த புதுசா செய்ய போறான் எல்லாம் முதல்வர் கனவுதான தேறமாட்டான்


Lesly Loyans
ஆக 22, 2024 09:19

தமிழ்நாட்டுல ஒரு கூட்டம் இருக்கு நீங்க தைரியமா வாங்க உங்கள ஒரு 30 வருஷம் கொள்ளையடிச்சி சம்பாரிக்க வச்சிருவோம்.


Ramesh Sargam
ஆக 22, 2024 09:04

அரசியல்வாதிகள் எத்தனை கட்சிகள் ஆரம்பித்து, எத்தனை கொடிகள் பறக்கவிட்டாலும், நமது தேசிய மூவர்ண கொடிக்கு இணையாகாது. வாழ்க பாரதக்கொடி. வாழ்க பாரதம். வீழ்க அரசியல்கொடிகள்.


Ramesh Sargam
ஆக 22, 2024 09:02

இந்த கொடிக்கு பதிலா புடலங்காய் கொடி, அவரைக்காய் கொடி என்று பயிர் பயிரிட்டிருந்தால், நமக்கு உபயோகமாக இருந்திருக்கும். வயிறும் நிறைந்திருக்கும். இதுபோன்ற அரசியல்கொடிகள் பறப்பது கொடுமை.


RAJ
ஆக 22, 2024 09:01

உன்ன எல்லாம் பாத்த ...எனக்கு பாவம இருக்கு... புஸ்யனு ஒரு போந்த கோழி பேச்சை கேட்டுகிட்டு உனக்கு ஏன் இந்த வேல... வெள்ள மனசுக்காரான் ... அள்ளி தந்த வள்ளல் விஜயகாந்த் அய்யாவையே நையாண்டி செய்த உலகம்... .. பாத்துக்கோ ராசா..


V.GUNASEKARAN TIRUPPUR
ஆக 22, 2024 08:51

கோவிந்தா கோவிந்தா உணக்கு எதுக்கு இந்த உருப்படாத வேலை ஜோசப் விஜய்??


sridhar
ஆக 22, 2024 08:25

பௌர்ணமி , சங்கட ஹர சதுர்த்தி இதெல்லாம் எதுக்கு ஜோசப் ? . யாரை ஏமாத்த ?


தென்காசி ராஜா ராஜா
ஆக 22, 2024 08:19

இது என்ன தமிழ் நாட்டுக்கு வந்த சோதனை


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ