உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விஜய் கட்சி பதிவு: தேர்தல் கமிஷன் ஏற்பு

விஜய் கட்சி பதிவு: தேர்தல் கமிஷன் ஏற்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்வதற்கான விண்ணப்பத்தை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன் ஆட்சேபனை தெரிவிக்க கெடு விதித்துள்ளது.தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை, நடிகர் விஜய் துவங்கியுள்ளார். கட்சியை, தேர்தல் கமிஷனில் பதிவு செய்வதற்கான விண்ணப்பம், கடந்த பிப்ரவரியில் வழங்கப்பட்டது. ஆனால், கட்சியை பதிவு செய்யாமல், தேர்தல் கமிஷன் நிலுவையில் வைத்தது. இதை தொடர்ந்து, பொதுச் செயலராக புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., ஆனந்த், பொருளாளராக வெங்கட்ரமணன், தலைமை நிலைய செயலராக கடலுார் ராஜசேகர், இணை கொள்கை பரப்பு செயலராக, வேலுார் தாஹீரா ஆகியோரை, விஜய் நியமித்தார்.இந்த விபரங்கள், தேர்தல் கமிஷனுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. இதை ஏற்றுள்ள தேர்தல் கமிஷன், கட்சி தொடர்பாக ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், வரும் 11ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என, கெடு விதித்துள்ளது. ஆட்சேபனைகள் வராத பட்சத்தில், தமிழக வெற்றிக் கழகத்தை மாநில கட்சியாக பதிவு செய்து, இம்மாத இறுதிக்குள் தேர்தல் கமிஷன் அறிவிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

santhanam
ஜூன் 08, 2024 12:26

யாரு "puzzy".....


Anand
ஜூன் 08, 2024 10:33

திருட்டு கூட்டத்திற்கு ஓத்தூத இன்னொரு கழகம்


Oviya Vijay
ஜூன் 08, 2024 09:45

2026-ம் ஆண்டு தமிழகத்தில் பிஜேபி ஆட்சி என்ற கோஷத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் இவரது அரசியல் பிரவேசம்... எழுதி வைத்துக் கொள்ளுங்கள்... நான் சொல்வது நடக்கும்... அரசியலில் ஒரு மாற்றம் வேண்டும் என நினைக்கும் நடுநிலையாளர்களின் ஓட்டுகளை இவர் பிரிப்பார்... அது நடந்து முடிந்த தேர்தலில் பிஜேபிக்கு விழுந்த ஓட்டுகள்... ஆகையால் அடுத்த தேர்தலில் பிஜேபியின் வாக்கு சதவீதம் தற்போதையதை விட குறையும்...


angbu ganesh
ஜூன் 08, 2024 10:45

கனவு காணுங்கள் ..... மேடை நாகரிகம் தெரியணும், சும்மா இது ஆடியோ லாஞ்ச் இல்ல எல்லாத்துக்கும் மேல அடிப்படை அரசியல் தெரியணும் இவருக்கு தெரிஞ்சதெல்லாம் ஏமாற்று வேலை மட்டுமே தான் 50 கோடி வசூல 300 கோடின்னு பொய் சொல்ல தெரியும்


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 09:38

அதிமுக, நாம் தமிழர், அமமுக வரிசையில் திமுகவின் மற்றுமொரு பி டீம் .....


RAMAKRISHNAN NATESAN
ஜூன் 08, 2024 11:21

பாஜகவின் வளர்ச்சியைத் தடுக்க அதிமுக, நாம் தமிழர், அமமுக வரிசையில் திமுகவின் மற்றுமொரு பி டீம் .....


செல்வக்கடுங்கோவாழியாதன்,அரண்மனைபுதூர்
ஜூன் 08, 2024 09:13

எம்ஜிஆரே திமுகவில் இருந்து விலகி தேர்தலை சந்தித்தது வெற்றி பெற்றார். ஆனால் இந்த ஒன்னத்துக்கும் உதவாத விஜய் அரசியலில் வெல்லப் போகிறாராம் ஆமா இந்த புஸ்ஸி ஆனந்தை காணவில்லையே ஏன்? ரஜினிகாந்த் அரசியலுக்கு வராமல் எப்படி தன் காசை காப்பாற்றிக் கொண்டாரோ


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை