உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நவீன்ஸ் நிறுவனத்துக்கு விஸ்வகர்மா விருது சி.ஐ.டி.சி., அமைப்பு கவுரவம்

நவீன்ஸ் நிறுவனத்துக்கு விஸ்வகர்மா விருது சி.ஐ.டி.சி., அமைப்பு கவுரவம்

சென்னை:நவீன்ஸ் கட்டுமான நிறுவனம், சென்னை மேடவாக்கத்தை அடுத்த வேங்கைவாசலில் செயல்படுத்தியுள்ள, 'ஸ்டார்வுட் டவர்ஸ் --- 3.0' குடியிருப்பு திட்டத்துக்கு, மத்திய கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சிலின் விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுதும் பசுமை கட்டுமான தொழில்நுட்பங்களை கடைப்பிடிப்பதற்கான முன்னெடுப்புகளை ஊக்குவிக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ளும் கட்டுமான நிறுவனங்களுக்கு, கட்டுமான தொழில் மேம்பாட்டு கவுன்சில் விருது வழங்கி கவுரவித்தும் வருகிறது. அந்த வகையில், தமிழக ரியல் எஸ்டேட் துறையில் முன்னணியில் உள்ள நிறுவனமான, சென்னையை சேர்ந்த நவீன்ஸ் கட்டுமான நிறுவனம், மேடவாக்கத்தை அடுத்த வேங்கைவாசலில், 'ஸ்டார்வுட் டவர்ஸ் - 3.0' என்ற அடுக்குமாடி குடியிருப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.இந்த திட்டத்தின் செயல்பாடுகள், பல்வேறு கட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டன. கட்டுமான நிலையில் பசுமை வழிமுறைகள், எந்த அளவுக்கு கடைப்பிடிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் ஆராயப்பட்டது. கட்டுமான செயல்பாடுகளில் சுகாதாரம், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முன்னுரிமை போன்ற நடைமுறைகளுக்கு பாராட்டு மற்றும் அங்கீகாரமாக, விஸ்வகர்மா விருது வழங்கப்பட்டுள்ளது. புதுடில்லியில் ஏப்., 3ல் நடந்த நிகழ்ச்சியில், இந்த விருது நவீன்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டது. இதுகுறித்து, நவீன்ஸ் கட்டுமான நிறுவன இயக்குனர் நவீன் கூறியதாவது: எங்கள் பிரதான திட்டமான, 'ஸ்டார்வுட் டவர்ஸ் - 3.0'க்கு, சி.ஐ.டி.சி.,யின் விஸ்வகர்மா விருது கிடைத்துள்ளது மிகப்பெரிய கவுரவமாகவும், அங்கீகாரமாகவும் அமைந்துள்ளது. இதனால், பெருமகிழ்ச்சியும், கவுரவமும் அடைகிறோம். இந்திய பசுமை கட்டட கவுன்சில் வாயிலாக, எங்கள் திட்டத்தில் பசுமை கட்டுமான நடவடிக்கைகளுக்கான முன்னெடுப்புகள் சரிபார்க்கப்பட்டு உள்ளன. சூரிய ஒளி வாயிலாக மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை மற்றும் எரிசக்தி நுகர்வை, 40 சதவீதம் வரை குறைத்து இருப்பது இத்திட்டத்தின் சிறப்பு அம்சம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை