உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு; மருத்துவமனைகளுக்கு உத்தரவு

வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு; மருத்துவமனைகளுக்கு உத்தரவு

கோவை : கேரளாவில், வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவி வருகிறது. இக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு, உயிருக்கு ஆபத்தான நரம்பியல் நோய்கள் ஏற்படலாம். மனிதர்களுக்கு இத்தொற்று பெரும்பாலும், பாதிக்கப்பட்ட கொசு கடிப்பதால் ஏற்படுகிறது.கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில், 'வெஸ்ட் நைல்' காய்ச்சலால், 47 வயது நபர் உயிரிழந்தார். இதையடுத்து, அனைத்து பகுதிகளிலும் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.தமிழகத்தில், கேரள மாநிலத்துக்கு அருகில் எல்லையோர கிராமங்களில், தொடர் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடமாடும் மருத்துவ மையங்கள் வாயிலாக, காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.வெளிமாநிலங்களில் இருந்து கோவை வந்து, காய்ச்சலுக்காக சிகிச்சை பெறும் நோயாளிகளின் தகவல்களை உடனடியாக வழங்க வேண்டும் என, அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குனர் அருணா கூறுகையில், ''கேரளாவில் இருந்து காய்ச்சலுடன் வருவோர், இங்கு ஏதாவது ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர். அனைத்து மருத்துவமனைகளும், அதுகுறித்து தகவல் தெரிவிக்க வேண்டும். ''வெஸ்ட் நைல் குறித்த பரிசோதனை, புனேவில் உள்ள தேசிய வைரஸ் ஆராய்ச்சி மையத்தில் மேற்கொள்ளப்படும். காய்ச்சல் பரவினால் பயப்படத் தேவையில்லை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Paulraj Ganapathy
மே 13, 2024 10:07

நல்ல முயற்சி வழக்கம்போல பேருக்குச் செய்யாமல் கொரானா தொற்றின் போது மைய அரசு செய்தது போல அத்துடன் செய்தால் மக்கள் நலம் பெறுவர்


மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை