உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் அளிக்கும் பரிசு பெட்டகத்தில் இருப்பது என்ன?

முதல்வர் அளிக்கும் பரிசு பெட்டகத்தில் இருப்பது என்ன?

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், தன்னை சந்திக்கும் விருந்தினர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு, 'தடம்' பரிசு பெட்டகத்தை பரிசளித்து வருகிறார். அதில், தமிழகத்தின் பாரம்பரிய கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.திருநெல்வேலியில் தயாராகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை, விழுப்புரத்தைச் சேர்ந்த டெரகோட்டா குதிரை சிற்பங்கள், நீலகிரி தோடா எம்ப்ராய்டரி சால்வை, பவானி ஜமுக்காளம், புலிகாட்டில் செய்யப்பட்ட பனை ஓலை பெட்டி, கும்பகோணம் பித்தளை விளக்கு என, கைவினைப் பொருட்கள் இடம் பெற்றுள்ளன.தமிழகத்தின் வளமான பண்பாட்டை பாதுகாக்கும் வகையில், பாரம்பரிய கைவினைப் பொருட்களுக்கு புத்துயிர் அளிக்கவும், சம காலத்தில் அதன் முக்கியத்துவத்தை பறை சாற்றுவதற்காகவும் 'தடம்' திட்டம் உருவாக்கப் பட்டது.அத்திட்டத்தின் கீழ், கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், முதல்வர் ஸ்டாலின் தான் சந்திக்கும் விருந்தினர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களுக்கு, தடம் பெட்டகத்தை பரிசாக அளித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

ஆரூர் ரங்
செப் 01, 2024 14:49

உபி. ஜாஃபரின் அன்பளிப்புகளை சேர்க்க மறந்து...


அல்வாபிரியன்
செப் 01, 2024 06:35

திருநெல்வேலி அல்வா குடுக்கலியா? அது நமக்கா?


Kasimani Baskaran
செப் 01, 2024 06:08

தமிழகத்தில் தயாரிக்கும் இன்னுமொரு முக்கிய பொருள் இல்லையே...


raja
செப் 01, 2024 07:20

சிடோபெற்றின்?...


ManiK
செப் 01, 2024 03:50

மக்கள் பணத்துல தனக்கு விளம்பரம் செய்யும் ச்டாவின்..மிக மோசமான waste trip.


புதிய வீடியோ