உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

அறநிலையத்துறையின் பொறுப்பு என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி

மதுரை : கோவில்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை கையாள்வதை தவிர, கோவில்களை பராமரிப்பதில் அறநிலையத்துறையின் பொறுப்புகள் குறித்து பதில் மனு தாக்கல் செய்ய இணை கமிஷனருக்கு, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி முன்னீர்பள்ளம் சுந்தரவேல் தாக்கல் செய்த பொதுநல மனு: சேரன்மகாதேவியில் ராமசாமி பெருமாள் கோவில் அறநிலையத்துறையின் பராமரிப்பில் உள்ளது. வளாகத்தில் கற்கள், முட்செடிகள் நிரம்பியுள்ளன. தரைத்தளம் அமைக்க தரமான கட்டுமான பொருட்களை பயன்படுத்தவில்லை. பக்தர்கள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். விஷ்ணு சகஸ்ரநாமம், வெங்கடேச சுப்ரபாதம், திருநாமம் தினமும் காலை, மாலை ஒலிக்க வேண்டும். கோவில் நடை திறக்கும் மற்றும் நடை சாற்றும் நேரம் குறித்து அறிவிப்பு இடம்பெற வேண்டும். கோவிலை புனரமைக்க வலியுறுத்தி திருநெல்வேலி கலெக்டர், அறநிலையத்துறை இணை கமிஷனருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், எல்.விக்டோரியா கவுரி அமர்வு: கோவில்கள் வாயிலாக கிடைக்கும் வருமானத்தை கையாள்வதை தவிர, கோவில்களை பராமரிப்பதில் அறநிலையத்துறையின் பொறுப்புகள் குறித்து, அதன் திருநெல்வேலி இணை கமிஷனர் அக்., 15ல் பதில் மனு தாக்கல் செய்ய நோட்டீஸ் அனுப்பப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 34 )

எவர்கிங்
செப் 14, 2024 22:03

அறநில்லாத்துறையின் பொறுப்பு கல்லா கட்டுதல் மட்டும்மே!


subramanian
செப் 14, 2024 15:18

கோவில் சொத்து அத்தனையும் திமுக காரன் மட்டுமே அதிகாரம் செய்ய வேண்டும். முஸ்லிம், கிறிஸ்தவ மக்கள் அங்கு பத்து ரூபாய் கொடுத்து விட்டு நூறு வருஷம் இருப்பார்கள். எந்த விதத்திலும் கோவில், இந்திய மக்களுக்கு எந்த பயனும் கிடைக்காமல் பார்த்து கொள்வது... இதுதான் அறநிலையத்துறை வேலை....


Ms Mahadevan Mahadevan
செப் 14, 2024 12:53

அறங்காவலர்கள் கட்சி சாராத பாத்திமானாக இல்லாதவரை கோவில் நிர்வாகம் சீர்படபா போவதில்லை. அண்ணல் ஆளும் கட்சி காரர்களே பெரும்பாலும் அறங்காவலர்களாக உள்ளார்கள். அறங்காவலர் அறம் இல்லாதார் ஆகிவிட்டால் இப்படித்தான் ஆகும்


Ram pollachi
செப் 14, 2024 12:53

இரண்டு குழுக்களின் கருத்து மோதலால் மூன்றாவதாக இ.ச.அ.துறை உள்ளே வருகிறது... அதன் பிறகு பத்து குழுவாக மாறி எது செய்தாலும் பஞ்சாயத்து தாங்க முடியவில்லை. பாதிக்கும் மேல் திருக்கோயிலுக்கு தேவையான பொருட்களை பக்தர்களே கொடுத்து விடுகிறார்கள். தனியார்கள் சுதந்திரமாக நடத்தும் கோவிலில் கூட அர்ச்சனை சீட்டு வழங்கும் மிஷினை எங்களிடம் தான் வாங்க வேண்டும் என்று கட்டாயப் படுத்துகிறார்கள்... தணிக்கை என்ற பெயரில் எப்போது வந்தாலும் சில ஆயிரம் ரூபாய் தண்டம்... உண்டியல் இல்லாத வழிபாட்டு தலங்கள் இருந்தால் அறநிலையத்துறை நுழைய யோசிக்கும்...


Sathyanarayanan Sathyasekaren
செப் 15, 2024 03:43

உண்மை. நாங்கள் எங்கள் சமூகத்து கோவிலில் இருந்த உண்டியலை அறமற்ற துறையையின் காரணமாக எடுத்துவிட்டோம்.


Svs Yaadum oore
செப் 14, 2024 12:33

குன்றக்குடி சண்முகநாதர் கோவில் யானை சுப்புலட்சுமி கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டு எப்படி இறந்தது ??......சுப்புலக்ஷ்மிக்கு கீற்று கொட்டகை ஏன்?.. காலில் சங்கிலி கட்டி கொட்டகையில் நெருப்பில் வெந்து, மரணவேதனையில், உலோக சங்கிலியை அதுவே உடைத்து வெளியேறும் அவலம்.....இதற்கெல்லாம் பதில்,சொல்லும் காலம் வரும் ..


M S RAGHUNATHAN
செப் 14, 2024 12:01

HRCE சட்டத்தின்படி கோயில் வருமானங்களை எப்படி செலவு செய்யவேண்டும் என்பதில் HRCE தலையிட முடியாது. அறங்காவலர் குழு தான் முடிவு எடுக்க வேண்டும். ஆனால் முறையாக செலவு செய்யப் பட்டதா என்று கண்காணிக்கும் வேலை மட்டும் தான் அறநிலையத் துறைக்கு. ஆனால் கோயில்கள், அதன் அனைத்து சொத்துக்கள் ஆகியவற்றுக்கும் HRCE தான் உரிமையாளர் என்று துறை சொல்கிறது. இதை பலமுறை உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் சுட்டிக் காட்டியும் அந்த துறையின் செயலாளர், ஆணையர் ஆகியோர் அலட்சியம் செய்கின்றனர். இத்தனைக்கும் இந்த துறையில் தான் சட்டம் படித்து ? பட்டம் பெற்ற அதிகாரிகள் அதிகம். It is an established fact HRCE has only supervisory and recommendatory powers only. They have no control over the assets of the temple. In short they are not owners of the temple.


Sathyanarayanan Sathyasekaren
செப் 15, 2024 03:45

பல கோவில்களில் கடவுள் இல்லை என்று சொன்ன ஹிந்துக்களை அழிக்க துடிக்கும் திருட்டு திராவிட ஈரோடு வெங்காயத்தின் அடிமைகள் தானே அறங்கவலர்கள் என்ற போர்வையில் இருக்கிறார்கள்.


ஆரூர் ரங்
செப் 14, 2024 10:58

முன்பெல்லாம் ஆலயங்களில் திருடர்கள் தாமே முன்கூட்டியே வந்து நோட்டமிடுவார்கள். இப்போது வீட்டு அம்மாக்களை பக்திமயமாக சாமி கும்பிடுவது போல நடிக்க வைத்து நோட்டமிட வைக்கிறார்களாம். காலம். கலிகாலம். புரிஞ்சவன் பிஸ்தா


ஆரூர் ரங்
செப் 14, 2024 10:56

வரவு செலவுகளை மேற்பார்வையிடும் உரிமை மட்டுமே அறநிலையத்துறைக்கு உண்டு. மற்ற பணிகளை அறங்காவலர்கள் மட்டுமே செய்ய முடியும். ஆனால் அறங்காவலர்கள் நியமனத்தில் காலங்காலமாக தலையீடு நடப்பதால் நேர்மையான பக்தர்கள் விண்ணப்பிக்கவும் பயப்படுகிறார்கள்.


V RAMASWAMY
செப் 14, 2024 10:48

இந்த துறை தேவையற்றது, இந்து கோயில் நிதியை எடுத்து வீணாக்குவதே இதன் வேலை. இவர்களின் அடக்குமுறையினால், இந்து கோயில்கள் தரமற்ற நிலையிலும், கோயிற் வளாகங்களில் ஆக்கிரமிப்புகளும் அக்கிரமங்களும் thaan நடைபெறுகின்றன.


sankar
செப் 14, 2024 10:31

அறத்தை தொலைத்து தலைமுழுகிவிட்ட ஒரு துறை


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை