உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / அமைச்சர் சொன்னது பொய்; அரசு டாக்டர்கள் எதிர்ப்பு  

அமைச்சர் சொன்னது பொய்; அரசு டாக்டர்கள் எதிர்ப்பு  

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: ''ஊதிய உயர்வு பிரச்னையில் சுமூக தீர்வு ஏற்படுத்தியதாக, அமைச்சர் சுப்பிரமணியன் தவறான தகவல் அளித்துள்ளார்,'' என, அரசு டாக்டர்களுக்கான சட்ட போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அதன் தலைவர் எஸ்.பெருமாள் பிள்ளை கூறியதாவது:

அரசு டாக்டர்களின் ஊதிய கோரிக்கையை, இதுவரை நிறைவேற்றாத நிலையில், தீர்வு காணப்பட்டு விட்டதாக, தவறான தகவலை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அனைத்து டாக்டர்களும், அரசாணை 354ஐ அமல்படுத்த கோரி போராடி வந்தனர். ஆனால், யாரும் கேட்காத அரசாணை 293ஐ அமல்படுத்தி உள்ளனர்.முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல, டாக்டர்களின் ஊதிய பிரச்னையில் தீர்வு காணப்பட்டு விட்டதாக, தவறான தகவல்களை கூறியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.அரசு டாக்டர்கள் மற்றும் சட்ட மேற்படிப்பு டாக்டர்கள் சங்க செயலர் ராமலிங்கம் கூறியதாவது:அரசு டாக்டர்களின் கோரிக்கை பேச்சில், அரசாணை 293ஐ பயன்படுத்தி ஊதியப்படிகள் அளிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் டாக்டர்களுக்கு, இந்த அரசாணையில் பலன்கள் கிடைக்கவில்லை. எனவே, அரசாணை 354ஐ மறு ஆய்வுக்கு உட்படுத்தி, ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுக்கும் ஊதிய பலன்கள் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 14 )

Ethiraj
செப் 11, 2024 11:13

Minister may not bluff to public if proved he will resign from MLA seat


Keshavan.J
செப் 11, 2024 11:07

உங்களை போல் கேவலமான பிறவிகள் இருக்கும் வரை உதயநிதி முதல் அமைச்சர்


Apposthalan samlin
செப் 10, 2024 10:32

என்ன உருட்டு உருட்டினாலும் 2026 இல் மீண்டும் திமுக தான் உதயநிதி தான் cm


Ramachandran Chandrasekaran
செப் 10, 2024 09:37

சொல்லறதெல்லாம் இப்போ சொல்லவீங்க ஆனா 40/40 ஜெயிக்க வைப்பீங்க


Keshavan.J
செப் 11, 2024 11:08

ஆமாம் எல்லாம் பேசுவார்கள் ஆனால் ஒட்டு போடா மாட்டார்கள்


sankar
செப் 10, 2024 09:12

பொய் என்பது திராவிட பாரம்பரியம் - ரூபாய்க்கு மூன்றுபடி - கூவம் மணக்கிறது - சென்னை சிங்கப்பூர் ஆக்குவேன் - இப்படி பலப்பல


G.Kirubakaran
செப் 10, 2024 09:53

பொய் திராவிடத்தின் முதுகெலும்பு


RAMAKRISHNAN NATESAN
செப் 10, 2024 08:34

பொய் சொல்லி அரசியல், தீவிரவாத வளர்ப்பு, ஹிந்து மத எதிர்ப்பு, சிறுபான்மையினரை மட்டும் மகிழ்வித்தல், திராவிட மாடல் ...... இவை அனைத்தும் ஒரே பொருளைத்தரக்கூடிய வேறு வேறு சொற்கள் .....


Ramesh
செப் 10, 2024 07:22

இதை மக்களிடம் போய் சொல்லுங்கள். அடிப்பர். அரசாங்கம் ஓட்டு போடுபவர்களுக்கு எவ்வளவு நலத்திட்டங்கள் செய்கிறது? அதற்க்கெல்லாம் பணம் யார் தருவார்கள்? உங்களை போன்றவர்களின் சம்பளத்தை குறைத்து தான் அதை செய்ய முடியும் என்கிற அடிப்படை அறிவு கூட இல்லாமல் எதற்கு நீ டாக்டருக்கு படித்தாய்?


Amsi Ramesh
செப் 10, 2024 09:52

கள்ள சாராயம் குடிச்சி செத்தல் பாத்து லட்ச்சம் விட்டுடீங்களே


R.MURALIKRISHNAN
செப் 10, 2024 07:00

பொய்-அது திராவிட கொள்கை. கொள்கை மாறாத அமைச்சர்


N.Purushothaman
செப் 10, 2024 06:37

திருட்டு திராவிடனா இருப்பதற்கான அடையாளமே பொய் சொல்றது தான் ....


Palanisamy T
செப் 10, 2024 06:35

இப்படி அமைச்சர் சொன்னது பொய். யென்று மருத்துவர்கள் சொன்னது சாதாரண விஷயமில்லை. இப்படிப் போய்ச் சொன்ன இவர் அதற்கு பொறுப்பேற்று பதவி விலகுவதுதான் முறை. செய்வாரா இவர் ? நிச்சயமாக இல்லை. இந்த இரண்டு திராவிடக் கட்சிகளுக்கும் ஏதப்பா கொள்கை, மானம் மறியாதை. வாக்களிக்கும் மக்களும் இவர்களுக்கு ஏற்றார்ப் போல் நடந்துக் கொன்டு தமிழகத்தை மற்றவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாக விற்று விடுவார்கள் போல் தெரிகின்றது. அதுதான் இப்போது நடக்கின்றது.


முக்கிய வீடியோ