மேலும் செய்திகள்
தஞ்சை, திருவாரூரில் நீர்நாய்களை பாதுகாப்பதற்கு புதிய திட்டம்
14 minutes ago
சென்னையில் கொட்டித் தீர்க்கும் கனமழை; விமான சேவைகள் பாதிப்பு
7 hour(s) ago | 5
சென்னை:லோக்சபா தி.மு.க., தலைவரை தேர்வு செய்ய, அக்கட்சியின் எம்.பி.,க்கள் கூட்டம், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அறிவாலயத்தில் இன்று நடக்கிறது.கடந்த 2019ம் ஆண்டின் லோக்சபா தி.மு.க., தலைரவாக டி.ஆர்.பாலு, துணை தலைவராக கனிமொழி, பொருளாளராக பழனிமாணிக்கம், கொறடாவாக ஆ.ராஜா ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அப்போதே, தலைவர் பதவிக்கு கனிமொழி போட்டியிட விரும்பினார். ஆனால், மூத்த எம்.பி., என்ற அடிப்படையில் டி.ஆர்.பாலுவுக்கு அப்பொறுப்பு தரப்பட்டது.தற்போது, டி.ஆர்.பாலு கட்சியின் பொருளாளராக உள்ளார். லோக்சபா தேர்தலில் போட்டியிடவே அவருக்கு வாய்ப்பு தரப்பட மாட்டாது என கூறப்பட்டது. ஆனால், இது தான் கடைசி தேர்தல் என அவர் கூறியதால், ஸ்ரீபெரும்புதுார் தொகுதி ஒதுக்கப்பட்டது.அதனால், இம்முறை பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் கனிமொழி, லோக்சபா தி.மு.க., தலைவராக தேர்வு செய்யப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர்கள் அனைவரையும், 'டிபாசிட்' இழக்க வைத்துள்ளார் கனிமொழி. அந்த அடிப்படையில், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட உள்ளதாக, அக்கட்சி வட்டாரத்தில் கூறப்படுகிறது. லோக்சபா தி.மு.க., செயலர் பதவிக்கு கடந்த முறை யாரையும் நியமிக்கவில்லை. எனவே, இந்த முறை செயலர் பதவியும், புதிதாக துணை கொறாடா பதவியும் உருவாக்கப்பட்டு, புதிய எம்.பி.,க்களுக்கு பொறுப்புகள் வழங்கப்பட உள்ளன.இது குறித்து, தி.மு.க., பொதுச்செயலர் துரைமுருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், 'முதல்வர் ஸ்டாலின் தலைமையில், லோக்சபா தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.,க்கள் கூட்டம், இன்று மாலை 6:30 மணிக்கு அறிவாலயத்தில் இன்று நடக்கவுள்ளது' என, கூறப்பட்டுள்ளது.
14 minutes ago
7 hour(s) ago | 5