உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / யாரு காசை... யாருக்கு தரப் போறீங்க...: பா.ஜ., பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கேள்வி

யாரு காசை... யாருக்கு தரப் போறீங்க...: பா.ஜ., பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் கேள்வி

மதுரை : 'நாட்டு வளங்களை வினியோகிப்பது தொடர்பாக பேசிய காங்கிரசார், யார் பணத்தை எடுத்து யாருக்கு கொடுக்கப் போகிறார்கள் எனத் தெரியவில்லை'' என்று பாஜ., மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் பேசினார்.மதுரையில் அவர் கூறியதாவது: காங்கிரசார் அரசு சொத்துக்களை மறு விநியோகம் செய்யப்போகிறார்களா, அவர்கள் சொத்துகளையே மறுவிநியோகம் செய்யப் போகிறார்களா என்பதை விளக்க வேண்டும். 'நேஷனல் ெஹரால்டு' பத்திரிக்கையை தங்கள் குடும்ப சொத்தாக மாற்றிய சோனியா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கட்சி சொத்தை குடும்ப சொத்தாக மாற்றிய காங்., இன்று பல குடும்பங்களின் சொத்துக்களை தாரை வார்க்கப் போகிறோம் என்கின்றனர். யார் பணத்தை எடுத்து யாருக்கு தரப்போகின்றனர் எனத் தெரியவில்லை.காந்தியின் பூமிதான இயக்கத்தில் தலைவராக இருந்த வினோபா, ஏழைகளுக்கு நிலம் வழங்க நாடு முழுவதும் 'பூதான் இயக்கம்' நடத்தினார். அதுதான் செல்வத்தை மறு விநியோகம் செய்வது.இன்று காங்கிரசார் அதற்கு மாறான திட்டத்தை கொண்டு வருகின்றனர். 2006ல் நடந்த தேசிய வளர்ச்சிக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மன்மோகன்சிங், 'நாட்டு வளங்களை வினியோகிப்பதில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை' என்றார். அப்படியெனில் கிறிஸ்தவர்களுக்கு 2ம் இடம், இந்துக்களுக்கு 3ம் இடம் தருவரா. ராகுலின் தற்போதைய பேச்சு, 'சுதந்திரத்திற்கு முன்னால் முஸ்லிம் லீக் தலைவர் ஜின்னா பேசியது போல இருக்கிறது' என்கிறார் பிரதமர் மோடி. காங்கிரசாரின் நாட்டை பிளவு படுத்தும் இச்செயலை பா.ஜ., வன்மையாக கண்டிக்கிறது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை