உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தி.மு.க.,வுக்கு எதற்கு 39 எம்.பி.,க்கள்?

தி.மு.க.,வுக்கு எதற்கு 39 எம்.பி.,க்கள்?

ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தும்படி, கூட்டணி கட்சியான பா.ம.க., தான் பா.ஜ.,விடம் வலியுறுத்த வேண்டும்' என, சட்ட அமைச்சர் ரகுபதி கூறியிருக்கிறார்.ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, மத்திய அரசை பா.ம.க., தான் வலியுறுத்த வேண்டும் என்றால், தி.மு.க., எதற்காக ஆட்சியில் இருக்க வேண்டும்? லோக்சபாவில் தி.மு.க, கூட்டணிக்கு 39 எம்.பி.,க்கள் எதற்கு; அதிகாரத்தை அனுபவிக்க மட்டும் தான் தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டளித்தனரா?ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த, தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ள நிலையில், அந்த கடமையை செய்ய திறனற்ற தி.மு.க., அரசு, மத்திய அரசு தான் செய்ய வேண்டும் என்று போகாத ஊருக்கு வழிகாட்டக் கூடாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மாட்டோம்; சமூக நீதி வழங்க மாட்டோம் என்பது தான் தமிழக அரசின் கொள்கை என்றால், அதை வெளிப்படையாக அறிவித்து விடலாம்.- ராமதாஸ் நிறுவனர், பா.ம.க.,


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Avudaiappan S
ஜூலை 05, 2024 10:09

39 எம் பி களும் வேஸ்ட்


R.Varadarajan
ஜூலை 03, 2024 01:37

சிற்றுண்டி சாலை பின் எதற்கு?


M Ramachandran
ஜூலை 02, 2024 19:39

மக்களை பொய் வார்த்தைளை தேர்தல் நேரத்தில் பேசி மயக்கி MP ஆனவுடன் பாராளுமன்ற காண்டீனில் ஓசியில் குறைய்ந்த விலையிலும் கிடைக்கும் அயிட்டங்களை ருசி பார்த்து கொண்டும் ஏதவாது கமிட்டியில் கிடைக்கும் பதவியில் சுகத்திலும் வருமானத்தையும் ஓசி பயண சலுகையில் ஊர் சுற்றி பார்க்கலாம் பார்த்து காலத்தை கடத்திக்கொண்டு போகலாம். ஏதாவது கல்லூரி கிடைய்க்கும் கோட்டாவில் பணம் பண்ணலாம். இதெல்லாம் வெளியே தெரியும் சலுகைகள். தலமையை திருப்த்தி படுத பாராளு பெருமன்ற சபை நடுவில் கோஷாம் போடலாம். எல்லோரும் ரசிக்க முடிந்தால் நடனமும் ஆடலாம். டில்லியில் அங்கு தெரிந்து ஹிந்தியில் பேசலாம். தமிழ்நாட்டில் மட்டும் வீரம் இந்திக்கு எதிராக ஒழிக கோக்ஷம் போட்டு பந்தா கட்டலாம்


Indian
ஜூலை 02, 2024 17:31

சாதி கட்சி ஏதற்கு ?? மாம்பழத்திற்கு ஓட்டு எதற்கு ?


Barakat Ali
ஜூலை 02, 2024 17:16

முதுகில் குத்திவிட்டது திமுக ....


Arasu
ஜூலை 02, 2024 15:49

..இனி தலைகீழா நின்னாலும் வெற்றி பெற முடியாது


Vijohn
ஜூலை 02, 2024 14:52

மிக சரியான கருத்து. திரு அண்ணாமலை அவர்களே நீங்களும் MP ஆகும் பொழுது நீங்கள் சொன்ன வாக்குறுதிகளை கோவை மக்களுக்கு செய்தால் போதும்.


Ramamurthy N
ஜூலை 02, 2024 11:43

வன்னியர்களுக்காக மட்டுமே கட்சியை நடத்தும் திரு ராமதாஸ் அவர்களே, தங்கள் மகன் மத்திய அமைச்சராக இருந்தபோது வன்னியர்களுக்காக என்ன செய்தார்? கட்சி கழுதை தேய்ந்து கட்டெறும்பாக போய்விட்டது. ஆனால் திரு அண்ணாமலை அவர்கள் அனைத்து ஜாதிகளுக்குமாக கட்சியை சிறப்பாக நடத்தி 12 சதவீதமாக உயர்த்தி விட்டார்.


Premanathan Sambandam
ஜூலை 02, 2024 10:12

சாதிக்கட்சி இவருக்கு எதற்கு ?


vbs manian
ஜூலை 02, 2024 08:55

தமிழகத்தில் நாற்பதுக்கு நாற்பது. டில்லியில் நாற்பதுக்கும் பூஜ்யம்.


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை