உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / உதயநிதி ஏன் வௌ்ளைக்கொடி பிடிக்கிறார்?

உதயநிதி ஏன் வௌ்ளைக்கொடி பிடிக்கிறார்?

மதுரை:மதுரை, கே.கே.நகரில் அ.தி.மு.க., தேர்தல் பணிமனை அலுவலகத்தை திறந்து வைத்த, அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி கூறியதாவது:அ.தி.மு.க., கூட்டணி, 40 இடங்களிலும் வெற்றி பெறும். பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., கள்ளக்கூட்டணி வைத்துள்ளது என முதல்வர் விமர்சனம் செய்வதற்கு, அவரே விளக்கம் அளிக்க வேண்டும்.இப்படி எல்லாம் யாரும் விமர்சனம் செய்ததே இல்லை. ஒவ்வொரு தேர்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி அமைக்கப்படுகிறது. பா.ஜ., கூட்டணியில் இருந்து வெளியேறிய பின்பும் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி வேண்டுமென்றே திட்டமிட்டு அ.தி.மு.க., மீது அவதுாறு பரப்பி வருகின்றனர். தோல்வி பயமே இதற்கு காரணம்.

விமர்சனம் கூடாது

கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்போம். கூட்டணியில் இருந்து வெளியேறி விட்டாலும், பா.ஜ., தவறு செய்தால் நாங்கள் கேட்போம். கூட்டணியில் இருக்கும் போது விமர்சனம் செய்யக்கூடாது. அப்படி விமர்சனம் செய்தால் உள்ளடி வேலை செய்வதாக அர்த்தம். கூட்டணி கட்சியினருக்கு அ.தி.மு.க., என்றுமே விசுவாசமாக இருக்கும். தமிழக மக்களை பாதிக்கும் திட்டங்களை கடுமையாக எதிர்ப்போம். பா.ஜ., 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்று கூறும் மத்திய அமைச்சர் முருகன், முதலில் வெற்றி பெறட்டும். ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்து போட்டியிடக் கூடிய, 5 ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் நிற்க தகுதியானவர்கள். அ.தி.மு.க.,வின் 2 கோடி தொண்டர்களில் நானும் ஒருவன். கட்சியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது தொண்டர்கள் எடுத்த முடிவு.பிரதமரை எதிர்ப்பது போல் அமைச்சர் உதயநிதி வெளியில் வீர வசனம் பேசி வருகிறார். கருப்புக்குடை பிடித்தால் பிரதமர் கோபித்துக் கொள்வார் என, வெள்ளைக்குடை பிடிக்கிறார்.

இரட்டை வேடம்

பிரதமரிடத்தில் சரணாகதி அடைந்து விட்டு, வெளியே பிரதமரை எதிர்ப்பது போல் இரட்டை வேடம் போடுகின்றனர். இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை