மேலும் செய்திகள்
வாக்காளர் திருத்தம் முறையாக நடக்கவில்லை!
9 hour(s) ago | 15
1 கோடி பேர் கையெழுத்து தமிழக காங்., பெருமிதம்
9 hour(s) ago | 4
துரோகிகள் இருக்கும் வரை ராமதாசுடன் சேர மாட்டேன்: அன்புமணி
10 hour(s) ago | 1
சென்னை:லோக்சபா தேர்தலில் பா.ம.க., போட்டியிட்ட 10 தொகுதிகளிலும் ஏற்பட்ட தோல்வி குறித்து, தொகுதிவாரியாக, வரும் 14 முதல் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் ஆய்வு நடத்துகிறார்.பா.ஜ., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில், 10 தொகுதிகளில் போட்டியிட்ட பா.ம.க., அனைத்திலும் தோல்வி அடைந்தது. தர்மபுரி தொகுதியில் போட்டியிட்ட பா.ம.க., தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா, 21,300 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். கள்ளக்குறிச்சியில் 71,290 ஓட்டுகள் மட்டுமே பெற்று, நாம் தமிழர் கட்சிக்கு அடுத்து நான்காவது இடத்தை பெற்றது.இது குறித்து, நாளை மறுநாள் முதல் திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில், போட்டியிட்ட தொகுதிகளில் தோல்வி ஏன் என்பது குறித்து தொகுதி வாரியாக ராமதாஸ் ஆய்வு நடத்துகிறார். வேட்பாளர்கள், பார்வையாளர்கள், மாவட்டச்செயலர்கள், மாவட்ட தலைவர்கள் , ஒன்றிய, நகர, பேரூராட்சி தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.நாளை மறுநாள் அரக்கோணம், 15ல் தர்மபுரி, 16ல் சேலம், 17ல் மயிலாடுதுறை, 19ல் திண்டுக்கல் தொகுதிக்கான ஆய்வுக் கூட்டம் நடக்கும் என்றும், காஞ்சிபுரம், ஆரணி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலுார் தொகுதிகளுக்கான ஆய்வு கூட்டம் நடக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும், பா.ம.க., தலைமை தெரிவித்துள்ளது.***
9 hour(s) ago | 15
9 hour(s) ago | 4
10 hour(s) ago | 1