உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கே.வி., பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவரா?

கே.வி., பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவரா?

சென்னை: 'தமிழகத்தில் உள்ள கே.வி., எனப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் மொழிப்பாடம் கற்பிக்க, தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகத்தில், மத்திய அரசின் சார்பில், 45 கேந்திரிய வித்யாலயா பள்ளி கள் இயங்குகின்றன. இவற்றில், மொழிப்பாடங்களாக, ஹிந்தியும், சமஸ்கிருதமும் கற்பிக்கப்படுகின்றன. தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது. இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் இலுப்பைக்குடியில் உள்ள பள்ளிகளில், 'தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தமிழாசிரியர்கள் தேவை; வரும், 16ம் தேதி நேர்காணல் நடக்கும்' என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் பள்ளி சார்பிலும், ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர் தேவை என, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ்மொழியை கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.எனவே, அனைத்து பள்ளிகளிலும் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

venugopal s
மார் 05, 2025 23:40

இப்போது வரை தமிழகத்தில் உள்ள நாற்பத்தி ஒன்பது கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஒன்றில் கூட தமிழாசிரியர் நியமனம் செய்யப்படவில்லை, தமிழ் கற்பிக்கப் படவில்லை என்பது நமது சங்கிகளுக்குத் தெரியுமா?


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 05, 2025 10:41

தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் மொழிப்பாடம் கற்பிக்க, தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்களாம் பெற்றவர்கள். கேட்கவே புல்லரிக்குது. சாம்பலைத் தடவிக்கொண்டு புல்தரையில் உருளலாம் போல இருக்கிறது. நாங்கள் பள்ளியில் படித்த காலத்தில் தமிழ் மொழியில் புலவர் பட்டம் பெற்ற புலமை மிக்கவர்களை தமிழாசிரியர்களாக நியமித்தார்கள். ஓவியம், உடற்பயிற்சி போன்று தமிழாசிரியர்கள் சிறப்பு ஆசிரியராக இருந்தார்கள். இந்த நிலை கொரோனா காலத்துக்கு முன்பு கூட இருந்ததாக நினைக்கிறேன். அப்பா ஆட்சி வந்ததும் பள்ளிகளில் தமிழாசிரியர் பதவிகள் ஒழிக்கப்பட்டு எந்த ஆசிரியரும் எந்த பாடமும் நடத்தலாம் என்ற நிலையை உருவாக்கி விட்டார்கள். இப்போது அரசு பள்ளிகளில் புலவர் பட்டம் பெற்ற தமிழாசிரியர்கள் எல்லா பாடமும் நடத்துகிறார்கள்.


mohanamurugan
மார் 05, 2025 09:17

மும்மொழி கொள்கை திட்டம் என்பது ஆங்கிலம் படிக்க முடியாத இந்தி பேசும் மக்களுக்காக நம்மை இந்தி படிக்க வைக்கும் திட்டமே என்ற உண்மை வெளிவந்து விட்டது.


mohanamurugan
மார் 05, 2025 09:14

தமிழ்நாட்டு மக்கள் தம் உயிராகக் கருதும் இரு மொழிக் கொள்கைத் திட்டத்தைப் பின்பற்றி வந்த கேந்திரிய வித்யாலயா இப்பொழுது முதன்முறையாக மும்மொழி திட்டத்தை தமிழ்நாட்டில் செயல்படுத்தி தமிழ் மொழி ஆசிரியர்களை நியமிக்க இருக்கிறது.


சுந்தரம் விஸ்வநாதன்
மார் 05, 2025 10:48

உங்கள் கருத்தில் தமிழ் நாட்டு மக்கள் என்பதற்குப்பதில் திராவிட அரசியல் வாதிகள் என்று இருக்கவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை