உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நோ பார்க்கிங் ஏரியாவில் அரசு பஸ்களை நிறுத்துவீர்களா?: அபராதம் விதித்து போலீசார் அதிரடி

நோ பார்க்கிங் ஏரியாவில் அரசு பஸ்களை நிறுத்துவீர்களா?: அபராதம் விதித்து போலீசார் அதிரடி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: சென்னை கிளாம்பாக்கம் பஸ் ஸ்டாண்ட் அருகே ' நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 22 அரசு பஸ்களுக்கு அபராதம் விதித்து, போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.திருநெல்வேலியில், பணி நிமித்தமாக நாங்குநேரி வந்த போலீஸ்காரர், அரசு பஸ்சில் டிக்கெட் எடுக்க மறுத்ததால், கண்டக்டருடன் வாக்குவாதம் ஏற்பட்டது. ஆனால், போலீசார் சீருடையில் கோர்ட் உள்ளிட்ட நீண்ட துாரம் செல்லும் போது, சம்பந்தப்பட்ட ஸ்டேஷன்களில் வாரன்ட் கடிதத்துடன் செல்ல வேண்டும்' என்பதும் உத்தரவாக உள்ளது. எனவே, நேற்றைய சம்பவம், போக்குவரத்து துறைக்கும், போலீசாருக்கும் இடையே மோதல், நெருடலை ஏற்படுத்தி உள்ளது.இந்நிலையில், சென்னை- புதுச்சேரி பஸ் தாம்பரத்தில் நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தி பயணிகளை ஏற்றியதற்காக, தாம்பரம் போக்குவரத்து போலீசார் ரூ.1000 அபராதம் விதித்தனர். சென்னையில் 'நோ பார்க்கிங்'-ல் நிறுத்தப்பட்டிருந்த 22 அரசுப் பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. போலீசாருக்கும், அரசு பஸ் கண்டர்களுக்கும் இடையே நடக்கும் வாக்குவாதங்கள் குறித்து சமூகவலைதளத்தில் விவாதம் கிளம்பி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Lion Drsekar
மே 24, 2024 15:32

எது எப்படியோ சட்டம் என்பது எல்லோருக்கும் பொது , அந்த நிலையில் போக்குவரத்துத்துறை மீது நடவடிக்கை பாராட்டப்படவேண்டும் ஓட்டுநர் உரிமம், ஒரிஜினல் இன்சூரன்ஸ் மற்றும் ஆர் சி புத்தக்ங்கமும் இருக்கவேண்டும் அதையும் சோதனை செய்தால் நன்றாக இருக்கும், காரணம் பாமர மக்கள் அத்தனை சுமைகளுடன் செல்லவேண்டியிருக்கிறதே ? வீட்டில் இருந்தாலும் ஆபத்து வெளியே சென்றாலும் ஆபத்து மற்றும் விபத்து அப்படி இருக்க வழிப்பரி கொள்ளையர்கள் வாகன ஒட்டியே தாக்கி வாகனத்தை எடுத்துச்சென்றால் அந்த திருடர் யாருக்குவேண்டுமானாலும் அந்த வாகனத்தை விற்கலாம் இதை யாருமே கேட்பதே இல்லையே ? அரசு போக்குவரத்து பொதுவாக எந்த ஒரு சட்டத்தையும் மதிப்பதில்லை நடவடிக்கைக்கு பாராட்டுக்கள், வந்தே மாதரம்


jayvee
மே 24, 2024 08:31

போலீஸ் செய்தது மிகப்பெரிய தவறு போக்குவரத்து ஊழியர்களும் அதையே செய்கிறார்கள் ஒசியில் பயணம் செய்வது அசிங்கமாக இல்லையா என்று இருதரப்பினரையும் பொன்முடி கேட்கவேண்டும்


தத்வமசி
மே 23, 2024 23:25

விடியலின் பெருமிதம்


Varadarajan Nagarajan
மே 23, 2024 21:38

இலவசங்கள் முற்றிலுமாக ஒழிக்கப்படவேண்டும் அவை மக்கள் வரிப்பணத்திலிருந்து வருகின்றது இந்த உலகத்தில் எதுவுமே இலவசமாக கிடைப்பதில்லை காவல்துறையில் பனி புரிபவர்களும், போக்குவரத்து துறையில் பணிபுரிபவர்களுக்கு மட்டும் ஏன் இலவசமாக கொடுக்கவேண்டும் மற்ற அரசு துறைகளில் பணிபுரிபவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இலவசமாக கொடுக்கலாம் அனைத்தும் அனைவருக்கும் இலவசம் என்று செய்தால் நல்லது தற்பொழுது மிகவும் நஷ்ட்டத்தில் இயங்கும் துறைகளில் போக்குவரத்து கழகமும் ஒன்று


UTHAMAN
மே 23, 2024 21:20

டிக்கட் எடுக்கச் சொன்னீகளேஅப்ப இருந்திருக்கனும் அறிவு


திண்டுக்கல் சரவணன்
மே 23, 2024 20:13

இவர்கள் இரண்டுபேரும் சாமானியர்களை மதிக்காதவர்கள் இவர்கள் சண்டையில் பாதிக்கப்படப்போவது மக்கள் தான்


rama adhavan
மே 23, 2024 19:52

நாளை லா அண்ட் ஆர்டர், குற்றம், விபத்து விவகாரங்களுக்கு அரசு டிரைவர், கண்டக்டர், டெபா, அரசு வண்டிகள் போலீஸ் வசம் தான் செல்ல வேண்டும் அப்போ பார்க்கலாம் யார் பாஸ் என்று ஆமாம் கையைக் காட்டிவிட்டு அரசு போக்குவரத்து ஊழியர்கள், அவர்கள் குடும்பம் மட்டும் எல்லா அரசு பஸ்களிலும் ஒசி பயணம் செய்கிறார்களே? அது சரியா?


jayvee
மே 24, 2024 08:33

அவர்களுக்கு குடும்ப பாஸ் உண்டு போலீசும் அலுவலுக்காக கொடுத்த ஜீப்பில் உல்லாசமாக சுற்றலாமா? கடைநிலை கான்ஸ்டபிளை வீட்டு வேலைக்காக பயன்படுத்தலாமா? யாரு செய்தாலும் தவறுதான் போலீஸ்காரர் பிள்ளை என்றால் அபராதம் இல்லை இது பெரும்பாலும் கடைபிடிக்கப்படும் எழுதப்படாத சட்டம்


சரவணன்
மே 23, 2024 18:57

புதுசு புதுசா பஸ் உடுவாங்க. பஸ்ஸை நிறுத்த இடம் எங்கே இருக்குன்னா முழிப்பாங்க அமைச்சர்களும் ஐ ஏ.எஸ் அதிகாரிகளும். தத்திகளின் ராஜ்ஜியத்தில் உய்யலாலா..


ஆரூர் ரங்
மே 23, 2024 18:21

இருவருக்குமே தங்கள் பணி மக்களுக்கு சேவை செய்வதே என்பது மறந்துவிட்டது. பேருந்து ஊழியர்களும் முழுக் குடும்பத்துடன் ஓசி பயணம் செய்வதுண்டு .


K.Muthuraj
மே 23, 2024 18:11

உள்ள வரியே கட்டியிருக்க மாட்டார்கள் வாங்கிய பெட்ரோலுக்கு காசு கொடுத்தார்களோ என்னவோ இதிலே இது வேற


மேலும் செய்திகள்













புதிய வீடியோ