உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்திய இளைஞர் கைது

சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட போதை பொருள் கடத்திய இளைஞர் கைது

பந்தலூர் :நீலகிரி மாவட்டம், பந்தலுார் அருகே நாடுகாணி சோதனை சாவடியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வகுமாரி, ரவிச்சந்திரன், சாஜன், தலைமை காவலர் மணி உள்ளிட்டோர், வாகன சோதனை ஈடுபட்டு இருந்தனர். அப்போது, கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து கோழிக்கோடு நோக்கி சென்ற பைக்கை சோதனையிட்டபோது, கோழிக்கோடு பகுதியை சேர்ந்த நிஜாம்,30, என்பவரிடம், எம்.டி.எம்.ஏ., (மெத்திலின் டியோச்சி மெதம்பேட் எமைன்) என்ற சர்வதேச அளவில் தடை செய்யப்பட்ட, 30 கிராம் போதை பொருள் மற்றும் போதை பொருள் பயன்படுத்துவதற்கான உபகரணம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.விசாரணையில், 'மைசூரில் இருந்து, போதை பொருள் வாங்கிச் சென்று, கேரளா மாநிலம் கோழிக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில், கல்லுாரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளார்,' என, தெரியவந்தது. போலீசார் நிஜாமை கைது செய்தனர். போலீசார் கூறுகையில், ' சர்வதேச அளவில் தடை செய்யப்பட்டுள்ள இந்த போதை பொருளை குடுவை போன்ற கண்ணாடி உபகரணத்தின் உள்ளே வைத்து, லேசாக சூடு படுத்தினால், அதிலிருந்து எழும் புகையை சுவாசித்தால் போதை தலைக்கு ஏறும். இதற்கு இளைஞர்கள் பலர் அடிமையாக உள்ளனர். நிஜாமிடம் பிடிக்கப்பட்ட போறை பொருளின் மதிப்பு ஒரு லட்சம் ரூபாயாகும். விசாரணை நடந்து வருகிறது,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

shakti
ஜூலை 12, 2024 20:31

இந்து இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி அழிக்க திட்டமா இது


Mani . V
ஜூலை 09, 2024 06:15

அப்பு, இது மாடல் ஆட்சியின் சாதனை.


mei
ஜூலை 07, 2024 21:21

தலையங்கத்தை பார்த்ததுமே குற்றவாளி மார்க்கத்தவர் என்று சந்தேகித்து விட்டேன், உண்மை


மேலும் செய்திகள்