உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இன்னுமா எண்ணுறீங்க...! லோக்சபா தேர்தல் பணி மதிப்பூதியம் மண்டல அலுவலர்களுக்கு கிடைக்கல!

இன்னுமா எண்ணுறீங்க...! லோக்சபா தேர்தல் பணி மதிப்பூதியம் மண்டல அலுவலர்களுக்கு கிடைக்கல!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: லோக்சபா தேர்தல் பணியில் மண்டல அலுவலர்களாக பணியாற்றியவர்களுக்கு மதிப்பூதியம் இதுவரை வழங்கவில்லை. லோக்சபா தேர்தல் பணிக்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் என 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்தப்பட்டனர். 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பூத்கள் அமைக்கப்பட்டன.தேர்தல் பணியில் ஈடுபட்ட அனைத்து பிரிவினருக்கும் அதற்கான மதிப்பூதியம் வழங்கப்பட்ட நிலையில், மண்டலஅலுவலர்களாக பணியாற்றியவர்களுக்கு மட்டும் இதுவரை வழங்கவில்லை.அதுபோல் ஓட்டுச் சாவடிகள் பராமரிப்பு செலவினம் இரண்டாம் கட்டமாக வழங்கப்படவில்லை.தேர்தல் கமிஷன் சார்பில் அனைத்து செலவினங்களும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்திற்கு விடுவிக்கப்பட்டும்மதுரையில் மட்டும் இன்னும் வழங்காமல் இருப்பதால் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்கள் அதிருப்தியில் உள்ளனர்.மண்டல அலுவலர்களாக பணியாற்றியவர்கள் கூறியதாவது: ஒரு சட்டசபை தொகுதிக்கு 20 முதல் 30 பேர் நியமிக்கப்பட்டோம். ஒரு மாதம் வரை தேர்தல் பணி இருந்தது. அடிப்படை சம்பளத்திற்கு ஏற்ப மதிப்பூதியம் வழங்கப்படும். ஒருவருக்கு ரூ.18 முதல் 20 ஆயிரம் வரை தர வேண்டி இருக்கும். அதுபோல் பூத் செலவுகளை அந்தந்த வி.ஏ.ஓ.,க்கள் மேற்கொண்டனர். பல பூத்களில் மண்டல அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். ஒரு பூத்திற்கு தலா ரூ.1300 ஒதுக்கப்பட்டது. இதில் முதற்கட்டமாக ரூ.650 மட்டுமே வழங்கப்பட்டது. இரண்டாம் கட்ட தொகை இன்னும் வழங்கப்படவில்லை. தேர்தல் கமிஷன் ஒதுக்கினாலும், மாவட்ட நிர்வாகம் ஏன் தாமதிக்கிறது என புரியவில்லை. இனியாவது இத்தொகையை வழங்க கலெக்டர் சங்கீதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ