மேலும் செய்திகள்
இன்று மிதமான மழை : வானிலை மையம் தகவல்
22-Apr-2025
இன்றும், நாளையும் வெயில் அதிகரிக்கும்
18-Apr-2025
சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவிலில், தலா, 4 செ.மீ., மழை பெய்துள்ளது. தமிழகத்தின் மேல் வளிமண்டல கீழடுக்கில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திப்பு நிலவுகிறது. இதனால், தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று, இடி, மின்னலுடன், மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அத்துடன், தமிழகத்தில் ஒரு சில இடங்களில், இன்று முதல் மே, 1 வரை அதிகபட்ச வெப்ப நிலை, 3 டிகிரி செல்ஷியஸ் வரை அதிகரிக்கும். நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், ஈரோடு, திருச்சி, திருத்தணி உட்பட 10 இடங்களில் தலா, 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேல் வெப்பம் பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
22-Apr-2025
18-Apr-2025