மேலும் செய்திகள்
தொழிலாளர் நல நிதி செலுத்த புதிய வசதி
04-Sep-2024
சென்னை : மருத்துவ சிகிச்சைக்காக, ஆறு பத்திரிகையாளர்களுக்கு, பத்திரிகையாளர் நல நிதி திட்டத்தின் கீழ், அமைச்சர் சாமிநாதன், 10.01 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.பத்திரிகையாளர்கள் கடுமையான நோயால் பாதிக்கப்பட்டால், மருத்துவ சிகிச்சைக்காக அவர்களுக்கு, 2.50 லட்சம் ரூபாய்; பத்திரிகையாளர் ஓய்வூதியம் பெறுவோருக்கு, பத்திரிகையாளர் நல நிதி தொகையில் இருந்து, 50 சதவீத தொகை வழங்கப்படுகிறது.அதன்படி, தலைமை செயலகத்தில் ஆறு பத்திரிகையாளர்களுக்கு, மருத்துவ நிதியுதவியாக, 10.01 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்கினார். இந்நிகழ்வில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலர் ராஜாராமன், செய்தி துறை இயக்குனர் வைத்தியநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.கடந்த 2021 முதல் தற்போது வரை, பத்திரிகையாளர் நல நிதி திட்டத்தின் கீழ், 13 பத்திரிகையாளர்களுக்கு, 25.11 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது.
04-Sep-2024