உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 100 நாள் வேலை திட்டம்; ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா? அதிமுகவிடம் கேட்ட முதல்வருக்கு அண்ணாமலை பதில்

100 நாள் வேலை திட்டம்; ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா? அதிமுகவிடம் கேட்ட முதல்வருக்கு அண்ணாமலை பதில்

சென்னை: 100 நாள் வேலை திட்டம் தொடர்பான புதிய மசோதா குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என்று கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி சட்டத்தை, 'விக்ஷித் பாரத் ஊரக வாழ்வாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு உறுதி சட்டம்' என, மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, 100 வேலை நாட்கள் என்பது, 125 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய அரசின் நிதி பங்களிப்பு, 60 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக மத்திய அரசு மசோதாவை பார்லியில் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழக அரசியல் பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்த புதிய சட்டம் குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன? என முதல்வர் ஸ்டாலின் இபிஎஸ்க்கு கேள்வி எழுப்பி இருந்தார். இதற்கு நேற்றைய நிருபர்கள் சந்திப்பில் அண்ணாமலை 100 நாள் வேலை திட்டம் குறித்து அளித்த விளக்கத்தை வீடியோவாக சமூகவலைதளத்தில் பதிவிட்டு பதிலடி கொடுத்து இருக்கிறார். மேலும் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: இந்தத் திட்டம் குறித்து, நேற்றே தெளிவான விளக்கத்தைக் கொடுத்திருக்கிறோம். நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாமல், ஒரு தனி உலகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களின் பெயரையும் சமஸ்கிருத மொழியில் வைத்துக் கொண்டு, ஹிந்தி எதிர்ப்பு என்று இன்னும் நாடகமாடிக் கொண்டிருப்பது நகைமுரண். 100 நாள் வேலைத் திட்டத்தை, 150 நாட்களாக உயர்த்துவோம் என்று அளித்த வாக்குறுதி நினைவிருக்கிறதா? முதல்வர் ஸ்டாலினால் முன்பு போல 100 நாள் வேலைத் திட்டத்தில் ஊழல் செய்ய முடியாது என்ற கவலையா? இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Gajageswari
டிச 18, 2025 04:49

உண்மை உண்மை உண்மை. ஊழல் செய்ய உருவாக்கப்பட்ட திட்டம். வெளிமாநில தொழிலாளர்கள் இல்லாத மாநிலங்களில் மட்டும் நடைமுறை படுத்த வேண்டும்


D Natarajan
டிச 17, 2025 21:41

இந்த 100 நாள் வேலை திட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் . ஊழலின் ஆதாரம். ஒருவர் கூட வேலை செய்வதில்லை. விவசாயத்திற்கு வேலை ஆட்கள் கிடைப்பதில்லை. இதற்க்கு ஆதரவு தெரிவிப்பர்கள் கிராமத்திற்கு சென்று பார்க்க வேண்டும். மிக கேவலம்


முருகன்
டிச 17, 2025 20:00

ஊழல் கட்சியுடன் கூட்டணி வைத்து கொண்டு ஊழல் பற்றி பேசுவது ...


Sundhar K R
டிச 17, 2025 19:44

அது என்ன விக்சித் திட்டம்?சிதம்பரம் தீ இக்சித் களுக்கான திட்டமாதமிழ்நாடு அரசு நிதி உண்டு என்றால் தூய தமிழில் திட்டப்பெயர் இருக்க வேண்டுமல்லவா?


Thravisham
டிச 18, 2025 08:20

கும்மிடிபூண்டி தாண்டி எங்காவது போயிருக்கியா? குண்டு சட்டியில் குதிரை ஓட்டினு இருந்தா இப்படித்தான். ஒரே பாஷை ஒன்னை ஓட்டாண்டியாகிவிடும்


என்னத்த சொல்ல
டிச 17, 2025 18:06

பேரை மாற்றினால் வாயில் நுழைய முடியாத பேர் ஒன்றை வைத்துவிட்டால், ஊழல ஒழித்துவிட முடியும். அடுத்தபடியாக பணத்தால் தான் கொலை கொள்ளை நடைபெறுகிறது. பணத்தில் உள்ள காந்தி படத்தை நீக்கி விடலாம்.


Thravisham
டிச 18, 2025 08:24

காந்தி போட்டோவை நீக்கி லட்சுமி சரஸ்வதி படத்தை போடணும்.


Palaniraj Seeniappan
டிச 17, 2025 17:50

all are madam nirmala FM plan, 100 to 125 increases in 25 % so people happy, Central Government share on money part is 60 % so it is with in the limit of their budget, so central government is happy , only for state goverment it is additional in their budget


Anand
டிச 17, 2025 17:34

என்ன ஏது என ஒரு விவரம் தெரியாமல் வாயை கொடுத்து புண்ணாக்கிக்கொள்வதே வாடிக்கையாகிவிட்டது.


சத்யநாராயணன்
டிச 17, 2025 16:43

திரு அண்ணாமலை அவர்களின் பதிலில் இருக்கும் கேள்விகளுக்கு ஸ்டாலினால் பதில் கூற முடியுமா


Gopal
டிச 17, 2025 16:41

தான் என்ன தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம் என்று கூட தெரியாத ஒரு திருட்டு கட்சி திமுக.


naranam
டிச 17, 2025 16:24

சீர் திருத்தம் செய்ய வேண்டியது தான்.. ஆனால் பெயர் திருத்தம் அவசியம் தானா? பழைய பெயருடன் ஒரு 2.0 சேர்த்துக் கொண்டால் ஆயிற்று..


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை