உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10 நகரங்களில் வெயில் சதம் வானிலை மையம் தகவல்

10 நகரங்களில் வெயில் சதம் வானிலை மையம் தகவல்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: 'தமிழகத்தில் நேற்று மாலை நிலவரப்படி, வேலுார், மதுரை உள்ளிட்ட 10 நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் பதிவானது' என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை: தமிழகத்தில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு, அணைகெடங்கு பகுதிகளில் தலா 8 செ.மீ., மழை பெய்து உள்ளது.

4 செ.மீ., மழை

இதற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் அடையாமடையில் 6; ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் 5; கன்னியாகுமரி மாவட்டம், சுருளக்கோடு, நாகர்கோவில், முக்கடல் அணை பகுதியில் தலா, 4 செ.மீ., மழை பதிவாகிஉள்ளது. தமிழக தென் மாவட்டங்களின் கடலோர பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அத்துடன் வளிமண்டல கீழடுக்கில், இரு காற்று சந்திப்பு நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் இன்று இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் 29 வரை மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஒரு சில இடங்களில், நாளை மறுதினம், 26 வரை அதிகபட்ச வெப்பநிலை, வழக்கத்தைவிட, 3 டிகிரி செல்ஷியஸ் கூடுதலாக பதிவாகலாம். வெப்பம் அதிகரிப்பு, ஈரப்பதம் அதிகரிப்பு போன்றவற்றால், வெளியில் செல்வோருக்கு அசவுகரியம் ஏற்படும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம்.

40.1 டிகிரி செல்ஷியஸ்

நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக, வேலுாரில், 104 டிகிரி பாரன்ஹீட், அதாவது, 40.1 டிகிரி செல்ஷியஸ் வெப்பம் பதிவானது. இதற்கு அடுத்தபடியாக, கரூர் பரமத்தி, திருச்சியில், தலா, 103 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 39 டிகிரி செல்ஷியசுக்கு மேலும், தர்மபுரி, ஈரோடு, மதுரை விமான நிலையம், சேலம், தஞ்சாவூர், திருப்பத்துார், திருத்தணி ஆகிய நகரங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்ஷியசுக்கு மேலும் வெப்பம் பதிவானது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

thehindu
ஏப் 24, 2025 08:43

இந்து மதவாத அரசின் அந்நிய மயமாக்கல், தொழில் துறை கார்போரேட்டுகளின் துரித கொள்ளை இப்படி ஒவ்வொரு வருடமும் ஒட்டுமொத்த நாடும் பாதிக்க காரணம்


இறைவி
ஏப் 24, 2025 12:38

வந்துட்டாரையா இருநூறு ரூபாய் முட்டு. தொழில் பெருக்கம் பிஜெபி ஆட்சிக்கு வந்த பின்தான் ஆரம்பித்ததா? அப்போ முன்பு காங்கிரஸ் ஆட்சியில் எல்லாம் கிராம கைதொழில்கள்தானா? பொய் பிரச்சாரம் எந்த அளவிற்கு தரம் தாழ்ந்து போயிருக்கிறது.


சமீபத்திய செய்தி