உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / இரண்டரை மாதத்தில் 100 டி.எம்.சி., கர்நாடகா உபரிநீர் திறப்பு

இரண்டரை மாதத்தில் 100 டி.எம்.சி., கர்நாடகா உபரிநீர் திறப்பு

சென்னை : இரண்டரை மாதங்களில், 100 டி.எம்.சி., உபரிநீரை காவிரியில் திறந்து, கர்நாடகா கணக்கு காட்டியுள்ளது.தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., நீரை கர்நாடகா அணைகளில் இருந்து திறக்க வேண்டும். ஒவ்வொரு மாதமும் வழங்கவேண்டிய நீரின் அளவும், காவிரி மேலாண்மை ஆணையத்தால் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.நடப்பு நீர் வழங்கும் தவணை காலம் ஜூனில் துவங்கியது. முதல் மாதத்திலேயே கர்நாடகா முறைப்படி நீர் திறக்காமல் ஏமாற்றியது. ஜூலையில் முறைப்படி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அந்த உத்தரவையும் கர்நாடகா மதிக்கவில்லை. திடீரென தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து, கர்நாடகா அணைகள் நிரம்பின. இதனால், ஜூலை இறுதியில் காவிரியில் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது. ஜூன் 1 முதல் ஆக., 13 வரை, 59 டி.எம்.சி., நீரை கர்நாடகா திறந்திருக்க வேண்டும். ஆனால், 159 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு உள்ளது. இவ்வாறு, 100 டி.எம்.சி., உபரி நீரை திறந்து காவிரியை வெள்ள வடிகாலாக பயன்படுத்தி, கர்நாடகா கணக்கு காட்டியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

kulandai kannan
ஆக 16, 2024 16:06

உபரி நீர் பாசனத்திற்கு உதவாதா??


Swaminathan L
ஆக 16, 2024 10:17

உபரி நீரைச் சேமித்து வைக்க இரண்டு மாநிலங்களிலும் வழியில்லை. மேட்டூர் போல இன்னொரு அணை கட்டிக் கொள்ளும் சாத்தியம் நமக்கு இல்லவே இல்லை. உபரி நீர் வீணாக ஓடும்போது ஒன்றும் செய்வதற்கில்லை. ஆனால், மழை பொய்த்து கர்நாடக அணைகளில் கையிருப்பு வெகுவாகக் குறைந்தால் மாதாந்திர நீர் விடுவிப்பு நடக்காது. நமக்கு பெரிய கஷ்டம் ஏற்படும். நூறு டிஎம்சி உபரி நீரைத் தேக்கி வைக்கிறாற்போல் தமிழ்நாடு நிர்வாகம் மற்றும் நீர் பகிர்மானக் கண்ட்ரோலில் மேகேதாது அணையைக் கட்டி 70:30 விகிதாசாரத்தில் நாம் தண்ணீரைப் பெறுவது ஒன்று தான் சாத்தியமானது. அவர்களையும் அணை கட்டக் கூடாது, நாமும் கட்ட வழியில்லை, உபரி நீர் 500 டிஎம்சி கடலில் கலந்தாலும், மாதாந்திர நீர்க் கணக்கு வேறு கணக்கு என்று வாதாடுவது எந்த வகையிலும் உதவாது. அதற்கு கர்நாடகம் மசியாது.


Kasimani Baskaran
ஆக 16, 2024 05:52

உபரி நீரை கொடுத்து அதற்க்கு கணக்கெழுதி விடுவார்கள். கட்டாந்தரை கோஷ்டியும் நமக்கேன் வம்பு என்று தண்ணீரை கடலுக்குள் விட்டு விடும். தமிழகத்துக்கான ஞாயமான நீர் பகிர்மானம் கிடைக்காது.


sankaranarayanan
ஆக 16, 2024 05:33

அவர்கள் நடந்த உண்மையைத்தான் சொல்கிறார்கள் திறந்து விட்டதை சொல்கிறார்கள் பருவநிலை மாற்றத்திற்கு யாருமே பொறுப்பேற்கவே முடியாது அது இயற்கை மாதாமாதம் இவ்வளவு அடிக்குமேல் உபரி நீரை திறந்துவிட்டால் அது கணக்கிலவாராது என்ற கிளாஸ் போட்டிருக்கவேண்டும் அது யாருடைய தவறு முன் வினை செய்யின் பின் வினை அனுபவிப்பான்


இவன்
ஆக 16, 2024 05:05

அவன் உபரி யா திறந்தான் சரி, நீங்க எதுல சேமிச்சு வைப்பிங்க?


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை