உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பின்தங்கிய 1000 இன்ஜி., கல்லுாரிகள்: தரம் உயர்த்த ஏ.ஐ.சி.டி.இ., நடவடிக்கை

பின்தங்கிய 1000 இன்ஜி., கல்லுாரிகள்: தரம் உயர்த்த ஏ.ஐ.சி.டி.இ., நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை:அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் எனும், ஏ.ஐ.சி.டி.இ., இன்ஜினியர்கள் தினத்தையொட்டி, கல்வி மேம்பாட்டுக்கான திட்டங்களை அறிமுகம் செய்துள்ளது. அந்த வகையில், 'ப்ராஜெக்ட் பிராக்டிஸ்' திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ், நாடு முழுதும் ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற, இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கல்வி தரத்தில், இரண்டு மற்றும் மூன்றாம் நிலையில் உள்ள, 1000 கல்லுாரிகளை தேர்வு செய்து, அவற்றை தரம் உயர்த்த நட வடிக்கை எடுக்கப்பட உள்ளது. அக்கல்லுாரிகளில், அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய திட்டங்கள் குறித்து கற்றல், நேரடி தொழில் பயிற்சி, மேம்படுத்தப்பட்ட வேலை வாய்ப்பு பயிற்சி போன்றவை செயல்படுத்தப்பட உள்ளன. இதன் வாயிலாக, நேரடியாக 20 லட்சம் மாணவர்கள், 10,000 பேராசிரியர்கள் பயனடைவர் என, ஏ.ஐ.சி.டி.இ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதேபோல், 'சாட் ஜி.பி.டி' போன்ற செயற்கை நுண்ணறிவு தளங்களை, மாணவர்கள் இலவசமாக பயன்படுத்தும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, மாணவர்களின் ஆராய்ச்சி மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகள் ஊக்கவிக்கப்படும் என, ஏ.ஐ.சி.டி.இ., தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Natarajan Ramanathan
செப் 18, 2025 08:22

தொழில் கல்வித்துறை தர மதிப்பீடு செய்து அந்த மதிப்பீட்டில் தேர்வான கல்லூரிகளில் படிக்க மட்டுமே கல்வி கடன் கிடைக்கும் நிலை வரவேண்டும். தரம் இல்லாத கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களும் அவர்கள் கடனை திரும்ப கட்டாததால் வங்கிகளும் தான் ஏமாறுகின்றன.


சிட்டுக்குருவி
செப் 18, 2025 06:07

தரம் இல்லாத கல்லூரிகள் தவராக தரத்தை உயர்த்தி காட்டி அட்மிஷன் செய்திருந்தால் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணத்தில் ஒரு பாதியை திருப்பிக்கொடுக்கும்படி அரசு ஆணை இடவேண்டும் .அல்லது நீதிமன்றம் தானாக ஏற்று விசாரிக்கவேண்டும் .மாணவர்களின் எதிர்காலத்தை வீணடிக்கவிடக்கூடாது .


முக்கிய வீடியோ