உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

10ம் வகுப்பு ரிசல்ட் வெளியானது: 93.80% மாணவ, மாணவிகள் தேர்ச்சி

சென்னை: 10ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வி துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். 93.80 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.கடந்த மார்ச் 28ம் தேதி முதல் ஏப்ரல், 15ம் தேதி வரை பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்தது. 12,480 பள்ளிகளில் பயின்ற 4 லட்சத்து 46 ஆயிரத்து 411 மாணவர்களும், 4 லட்சத்து 40 ஆயிரத்து 465 மாணவிகளும் 25,888 தனித்தேர்வர்களும், 272 சிறைவாசிகளும் என 9 லட்சத்து 13 ஆயிரத்து 36 பேர் எழுதினர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ljlclawt&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=010ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 22ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெற்ற நிலையில், தேர்வு முடிவுகள் இன்று (மே 16) காலை 9 மணிக்கு வெளியானது. மொத்தம் 93.80 % மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மாணவிகளே முதலிடம்!

10ம் வகுப்பு பொதுத்தேர்வில், மாணவிகள் 4,17,183 (95.88%) தேர்ச்சி பெற்றுள்ளனர்; மாணவர்கள் 4,00,078 (91.74%) தேர்ச்சி அடைந்துள்ளனர். வழக்கம் போல் இந்தாண்டும் மாணவிகள் தேர்ச்சி சதவீதத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

பள்ளிகள் வாரியாக தேர்ச்சி விகிதம்:

அரசுப் பள்ளிகள்- 87.34%அரசு உதவி பெறும் பள்ளிகள்- 93.09%

100/100 மார்க்!

பாடம் வாரியாக,100/100 மார்க் எடுத்தவர்கள் விவரம்:மொழிப்பாடம்- 32தமிழ் - 8ஆங்கிலம்- 346கணிதம்- 1,996அறிவியல்- 10,838சமூக அறிவியல்- 10,256

சிவகங்கை முதலிடம்!

10ம் வகுப்பு தேர்வில் 'டாப் 10' மாவட்டங்கள் (தேர்ச்சி விகிதம்);சிவகங்கை மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 98.31 % மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.1. சிவகங்கை- 98.31%2.விருதுநகர்- 97.45%3. தூத்துக்குடி-96.76%4. கன்னியாகுமரி-96.66%5. திருச்சி- 96.61%6. கோவை-96.47%7. பெரம்பலூர்- 96.46%8. அரியலூர்- 96.38%9. தர்மபுரி-96.31%10. கரூர்-96.24%தேர்வு முடிவுகளை https://www.digilocker.gov.in/, https://tnresults.nic.in/ இணையதளங்களில் மாணவர்கள் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை பதிவிட்டு அறியலாம். மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கும் குறுஞ்செய்தி வழியாக, தேர்வு முடிவுகள் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் தேசிய தகவல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும், கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

11ம் வகுப்பு ரிசல்ட்!

11ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. 92.09 சதவீதம மாணவ, மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

அரியலூர் முதலிடம்!

11ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிகம் தேர்ச்சி பெற்ற மாவட்டங்களில் அரியலுார் மாவட்டம் முதலிடம் பிடித்துள்ளது. தேர்வு எழுதியவர்களில் 97.76% மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

100/100 மார்க்!

11ம் வகுப்பு பொதுத் தேர்வில் பாடம் வாரியாக 100/100 மதிப்பெண் பெற்றவர்கள்:தமிழ்- 41ஆங்கிலம்- 39இயற்பியல்-390 வேதியியல்-593உயிரியல்-91கணிதம்-1,338தாவரவியல்-4விலங்கியல்-2கணினி அறிவியல்-3,535வரலாறு-35வணிகவியல்- 806கணக்குப்பதிவியல்- 111பொருளியல்-254கணினிப் பயன்பாடுகள்- 761வணிகக் கணிதம் மற்றும் புள்ளியியல்- 11711ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் இணைய தளங்களில் அறிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Svs Yaadum oore
மே 16, 2025 13:59

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில்,செஞ்சி யில் , ஒரே தேர்வு மையத்தில் தேர்வெழுதிய 167 பேர் வேதியியல் பாடத்தில், 100க்கு 100 மதிப்பெண் பெற்றுள்ளனராம் ...... ஆட்சியா இது படு கேவலமான ஆட்சி நடக்குது .....முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் கூறி, பரீட்சையில் காப்பி அடிக்க உதவி செய்கின்றனராம் .....அரசியல்வாதிகள் தங்கள் மாவட்டத்தில் உள்ள, தனியார் பள்ளிகளுக்கு ஆதரவளிக்கும்படி, கலெக்டரிடம் சிபாரிசு செய்கின்றனராம் ....இப்படி படு கேவலமான ஒரு ஆட்சியை தமிழ் நாடு கண்டதில்லை .....கஷ்டப்பட்டு படித்து பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு எந்த மதிப்பும் கிடையாது ....பள்ளி கல்வி முழுக்க மதம் மாற்றிகள் ஆக்கிரமிப்பு ....இப்படித்தான் சீரழியும் ...


Kulandai kannan
மே 16, 2025 12:08

6.20 சதவீத மாணவர்களின் தோல்விக்குக் காரணமான 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகளை அடுத்த ஆண்டு முதல் ரத்து செய்ய திராவிட மாடல் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டசபையில் தீர்மானம் போட்டு, நேரடியாக சுப்ரீம் கோர்ட்டுக்கு அனுப்பி அனுமதி பெற வேண்டும்.


ஆரூர் ரங்
மே 16, 2025 11:23

நாலாம் வாய்ப்பாடாவது தெரியுமா?


சுந்தரம் விஸ்வநாதன்
மே 16, 2025 11:11

அதிக தேர்வுக்கும் அதிக மதிப்பெண்களுக்கும் ஜாக்கடோ ஜிய்யோவுக்கு நன்றி.


vbs manian
மே 16, 2025 09:47

நூற்றுக்கு நூறு சக்கை போடு போடுகிறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை