உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் /  நடைபயணத்தில் 11 திரைப்படங்கள்: வைகோ

 நடைபயணத்தில் 11 திரைப்படங்கள்: வைகோ

கடலுார்: 'போதைப்பொருளை தடுக்க தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும்,' என, ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ தெரிவித்துள்ளார். அவர் அளித்த பேட்டி: தமிழகத்தில், பள்ளி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் பெண்கள், மார்க்கெட்டுக்கு சென்ற தாய்மார்கள் வீடு திரும்புவார்களா என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இதற்கு காரணம் போதைப்பொருள். இதை தடுக்க வலியுறுத்தி சமத்துவ நடை பயணத்தை மேற்கொள்கிறேன். தமிழக முதல்வரிடம் நான் கேட்டுக் கொள்வதெல்லாம் போதை பொருளை தடுக்க தனிச் சட்டம் கொண்டு வாருங்கள். வேளாண் மற்றும் விளையாட்டில் இந்தியாவில் முதன்மை மாநிலமாக திகழ்ந்த பஞ்சாப், போதை பொருள் பழக்கத்தால் நாசமாகி விட்டது. அதேபோல் தமிழகம் சீர்கெட்டு விடக்கூடாது. தற்போது எனக்கு 82 வயதாகிறது. இது, எட்டாவது நடைபயணம். எங்கள் நடைபயணத்தில் 25 கபடி வீரர்கள் உள்ளனர். இவர்கள் மாலை நேரங்களில் கபடி விளையாடி மகிழ்வர். அதேபோல் இரவு நேரங்களில் ஆங்கிலம், தமிழ் உள்ளிட்ட 11 திரைப்படங்கள் திரையிட முடிவு செய்துள்ளேன். நான்கு டாக்டர்கள் குழு எங்களுடன் பங்கேற்கின்றனர். எனது நடை பயணத்தை முதல்வர் ஸ்டாலின் தான் துவக்கி வைக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை