உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது!

தமிழக மீனவர்கள் மேலும் 12 பேர் கைது!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: கடந்த நவ.,10ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இன்று (நவ.,12) மேலும் தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.கடந்த நவ.,10ம் தேதி ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேர் நெடுந்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக ரோந்து பணி சென்ற இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்தனர். எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களது 3 விசைப்படகையும் பறிமுதல் செய்தனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=xepnhrxx&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று (நவ.,12) பருத்தித்துறை அருகே மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 12 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு விசைப்படகையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

அப்பாவி
நவ 12, 2024 18:30

அவிங்க இந்திய மீனவர்கள் இல்லியாம். இறையாண்மையை பாதிக்குமாம்.


Oviya Vijay
நவ 12, 2024 13:32

இது ஒன்றும் முதல்முறை நடக்கக் கூடியது அல்ல... ஆயிரக்கணக்கான முறை தொடர்ந்து நடந்துகொண்டு தான் உள்ளது... மூன்றாம் முறை தொடர்ந்து மத்தியில் பதவி ஏற்றிருக்கும் பிஜேபியின் கேவலமான அரசியலையே இது காட்டுகிறது... பத்து வருடங்களுக்கு மேலாக மத்தியில் பதவியில் இருக்கும் சங்கீ அரசுக்கு இது தெரியாமல் இல்லை... கண்டும் காணாதது போல் நடந்து கொண்டு வருகின்றனர் என்பதே உண்மை... இலங்கை அரசு திவாலாகும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட போதும் கூட நம் மத்திய அரசு அதற்கு கை கொடுக்கத் தான் முனைகிறது... அவர்களுக்கு பொருளாதார சிக்கலில் இருந்து மீண்டு வர பண உதவி, UPI Payment முறையை அந்நாட்டில் நடைமுறைப் படுத்துவதற்கு உதவி, நம் இந்திய நாட்டில் தயாரிக்கப் படும் ரயில் பெட்டிகளை அவர்களுக்கு கொடுத்து உதவி என பல வகைகளில் உதவி செய்ய சித்தமாக இருக்கிறதே தவிர தமிழகத்தை சேர்ந்த இந்திய மீனவர்கள் தொடர்ந்து இலங்கை ராணுவத்தினரால் தாக்கப் படுவதற்கும், கைது செய்யப்பட்டு படகுகள் பறிமுதல் செய்யப்படுவதற்கும் ஒரு நிரந்தர தீர்வு காண முயலவில்லை... இலங்கை அரசுக்கு ஒரு கடிவாளம் போடக் கூட துணிவில்லை. துணிவில்லை என்பதை விட இலங்கையை நம்மால் ஆட்டிப் படைக்க முடியும் என்ற நிலை இருந்தும் கூட அதை மத்திய அரசு விரும்பவில்லை என்பதே உண்மை. நமக்கு ஓட்டு போடாத தமிழக மக்களுக்கு நாம் ஏன் உதவி செய்ய வேண்டும் என்ற இருமாப்பில், நடப்பதை வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு... தமிழக மக்களை தொடர்ந்து பல்வேறு வழிகளில் வஞ்சித்துக் கொண்டிருக்கும் பிஜேபி அரசு தாங்கள் செய்யும் செயல்களால் என்றைக்குமே தமிழகத்தில் கால் பதிக்கவே முடியாது என்பதை உணர மறுக்கின்றனர்... வெளியுறவுத் துறை அமைச்சர் மற்றும் பல மட்டத்து உயர் அதிகாரிகள் அவ்வப்போது இலங்கைக்கு விஜயம் செய்தும் எந்த பலனுமில்லை... தங்களுக்கு தெரிந்த பக்கோடா செய்வது எப்படி என்பதை அவர்களுக்கு சொல்லிக் கொடுத்து விட்டு வருகின்றனர் என்றே தோன்றுகிறது. வேறு ஒன்றும் பிரயோஜனமாக எதுவும் அவர்கள் செய்வதில்லை... நம் இந்திய நாட்டில் மாநில அரசுகளுக்கு ராணுவத்திற்கு உத்தரவிடும் வகையில் அதிகார வரம்பு இல்லை... அதன் காரணமாக மத்திய அரசை சார்ந்தே இருக்க வேண்டிய அவல நிலை நமக்கு. நமக்கு அவ்வாறான அதிகாரம் இருந்திருந்தால் இந்நேரம் இலங்கை மீனவர்கள் பெரும்பாலானோர் இந்திய ராணுவத்தினரால் சிறைபிடிக்கப்பட்டு தமிழக சிறைகளில் இருந்திருப்பர்... இனியும் பொறுத்திருக்காமல் தமிழகமே ஸ்தம்பிக்கும் அளவிலான ஒரு போராட்டத்தை தமிழகத்தில் உள்ள கட்சிகள் முன்னெடுத்துச் சென்றால் மட்டுமே மத்திய அரசு கொஞ்சமாவது சொரணை கொண்டு ஏதாவது துணிந்து செய்வதற்கு செவி மடுக்கும்... அதுவரை தமிழகத்தைச் சார்ந்த இந்திய மீனவர்களுக்கான பிரச்னைக்கு ஒரு நிரந்தர தீர்வு என்பது கேள்விக்குறியே...


Gopalan
நவ 12, 2024 09:45

அடிக்கடி வரும் செய்தி ஆகி விட்டது.ஒரு சிறிய நாடு,, அடுத்துள்ள பெரிய நாடு சம்பந்தப்பட்ட காரியங்களில் காரணமில்லாமல் இடைப்பட மாட்டார்கள். நம் மக்கள் விதிகளையும், சட்ட திட்டங்களையும் மதிப்பது குறைவு.சுதந்திரம் என்று நினைப்பார்கள். அரசியல்வாதிகளைத் தவிர வேறு யாரையும் மதிக்க மாட்டார்கள். மீன் கூடுதல் கிடைக்கும் பிடி பட்டால் பார்த்து கொள்ளலாம் என்று நினைப்பார்கள். கள்ள கடத்தும் அதிகம். வேறு எந்த பகுதியிலும் இப்படிப்பட்ட செய்தி வருவதில்லை. இனி முதல்வர் கடிதம் எழுதுவார்


veeramani
நவ 12, 2024 09:28

தமிழக ஈனவர்கள் இலங்கை படையிரானால் கைது .. இந்த நியூஸ் அடிக்கடி வருகிறது ..அன்றைய ராம்நாடுக்காரரின் செய் தியை பகிருங்கள். அறுபதுகளில் யாழ் நகரில் இருந்து சினிமா பார்ப்பதற்கு இலங்கை தமிழர்கள் அடிக்கடி கடல் தாண்டி ராராமேஸ்வரம், ராம்நாத் வந்துள்ளதாக்கி கேள்வி .பின்னர் விடுதலைப்புலிகளின் அட்டகாசத்தால் இலங்கை தமிழர்கள் அவர்களது பகுதியில் மட்டும் மீன் பிடுத்தனர் . பின்னர் ராமேஸ்வரம் தீவு பரம்பரை மீனவர்கள் தொழிலை விட்டுட்டு மற்ற வே லாய் களுக்கு சென்றுள்ளனர். தற்சமயம் மீன் பிடிப்பவர்கள் தூத் துக்குடி, கன்னியாகுமாரி மாவட்டம் மற்றும் கேரளா பகுதியை சேர்ந்தவர்கள். இவர்கள் கான்ட்ராக்டரால் குழிக்கு அமர்த்தப்பட்டவர்கள். மேலும் இரட்டைப்பிடி மீன்வலைகளை வைத்து மீன்களையும் குஞ்சுகளையும் வழித்துஎடுக்கிறார்கள். குஞ்சுகளிகூட திரும்ப கடலில் விடுவதில்லை. இதனால் நாடு வ த்தையில் மீன்பிடிப்பவர்கள் சாப்பிட வழியில்லாமல் உள்ளனர். மேலும் பிடிக்கப்பட்ட மீன்களை ராம்நாத் சிவகங்கை மதுரை பகுதி மக்களுக்கு விற்பதேயில்லை அனைத்தும் கேரளாவிற்கு செல் கிறது . இதனால் மீன்கள் உற்பத்தி குறைந்து, இவர்கள் இலங்கை கடற்கரைக்கு சென்று திருட்டு தனமாக இலங்கை பகுதியில் மீன் வலை வீசி பிடிக்கிறார்கள் . இலங்கையில் வசிக்கும் மீனவர்களும் தமிழர்கள்தான் . அவர்களது வாழ்க்கையை கெடுக்கிறார்கள். பங்கஜலசந்தியில் பிடிக்கும் மீன்கள் தமிழ்நாட்டில் விற்கப்படுவதேயில்லை. திருடிச்சென்ற மீனவர்களை இலங்கை காவல்படை கொஞ்சாவச்செய்யும் . நமது இந்திய பிரதமர் மோடி ஜி ஆட்சியில் எவரும் கொள்ளப்படுவதில்லை. திருந்த வேண்டியது மீனவர்கள்தான்


Priyan Vadanad
நவ 12, 2024 09:24

நமது மீனவர்கள் ஸ்ரீலங்கா எல்லைக்குள் போய் மீன் பிடிப்பதை வாடிக்கையாய் கொண்டுள்ளனர் என்பது நிதர்சனமான உண்மை. அதனால்தான் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் நீ அடிப்பது போல் அடி நான் அழுவதுபோல அழுகிறேன் என்று நடிக்கிறார்கள்.


N Srinivasan
நவ 12, 2024 08:25

இந்த செய்தியை தினமும் கேட்கவே அசிங்கமாகவும் வெட்கமாகவும் உள்ளது. ஏன் ஒரு இலங்கை மீனவர் கூட கைது செய்வதில்லை? நமது மீனவர்கள் எல்லோரும் அப்படி எல்லையை தாண்டுகின்றார்களா ? அப்படி இருந்தால் நமது கடற்படை மற்றும் கடற்படை காவலர்கள் என்ன செய்கிறார்கள் ? நமது மீனவர்களை தடுக்க மாட்டார்களா ? தொழில் நுட்பம் மூலம் இதை தடுக்க வழி செய்ய வில்லையா ? இந்த செய்தி மூலம் மத்திய அரசு மீது தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு வெறுப்பு வருகின்றது என்றால் அது மிகை இல்லை


Prem
நவ 12, 2024 07:56

ஓஓ எதுக்குப்பா கைது பண்ணுறீங்க


Smba
நவ 12, 2024 07:52

தொடர்கதை


புதிய வீடியோ